Thanjavur Election Result 2024: தஞ்சை கோட்டையை கைப்பற்றுகிறது இளம் சிங்கம் முரசொலி : முதல் சுற்றிலேயே இத்தனை வாக்குகள் முன்னிலையா?
Thanjavur Lok Sabha Election Result 2024: தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. திமுக வேட்பாளர் முரசொலி 16,441 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக இன்று நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற்றது. அதன்படி தஞ்சை தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. அதன்படி தஞ்சைநாடாளுமன்ற தொகுதியில் உள்ள தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப் படை, தமிழக போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வளாகம் முழவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கை ஆனது காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதற்காக குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணும் பணிக்கு மொத்தம் 204 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் எண்ணும் பணிக்காக 8 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு 23 சுற்றுகளும், தஞ்சை, மன்னார்குடி, ஒரத்தநாடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 21 சுற்றுகளும், பட்டுக் கோட்டை தொகுதிக்கு 20 சுற்றுகளும், குறைந்தபட்சமாக பேராவூரணி தொகுதிக்கு 19 சுற்றுக்களும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றுகளில் டேபிள்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கணினி குலுக்கல் மூலமாக மே 27ம் தேதி முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கணினி மூலம் இரண்டாம் கட்டத் தேர்வு நேற்று நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு என்னும் மையத்தில் அடிக்கடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு எண்ணும் பணிக்காக 306 அலுவலர்கள், 102 நுண் பார்வையாளர்கள், 102 வாக்கு என்னும் மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு என்னும் உதவியாளர்கள் என மொத்தமாக 612 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் மன்னார்குடி தொகுதியில் 285, திருவையாறு 314, தஞ்சாவூர் 292, ஒரத்தநாடு 287, பட்டுக்கோட்டை 272, பேராவூரணி 260 எனக்கு மொத்தமாக 1710 வாக்குச் சுவடிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. இதில் மன்னார்குடியில் 1,71,533, திருவையாறு 1,93,504, தஞ்சாவூரில் 1,70,887, ஒரத்தநாட்டில் 1,69,428, பட்டுக்கோட்டை 1,64,147, பேராவூரணி 1,55,450 என்ன மொத்தமாக 1,024,949 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கான வாக்கு என்னும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
காலை ஏழு மணி முதல் தேர்தல் முகவர்கள் அனைவரும் வருகை தந்தனர். தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொண்ட பின்னரே வாக்குகள் எண்ணும் பகுதிக்கு தேர்தல் முகவர்கள் அனுப்பப்பட்டனர். சரியாக காலை 8 மணிக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்கள் 6454 பதிவாகி இருந்தது. தலா 500 ஓட்டுக்களாக பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்து வருகிறது.
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. திமுக வேட்பாளர் முரசொலி 16,441 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திமுக - 26134
தேதிமுக - 9693
பாஜ- 8150
நாம்தமிழர் - 7451
நோட்டா - 663
மொத்தம் - 54433
திமுக - (16441) முரசொலி முன்னிலை