மேலும் அறிய

1952 முதல் 2021 வரை! ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் தனித்து வெற்றி பெற்ற தொகுதிகள் எத்தனை?

Tamil Nadu Assembly Election: தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியைக் கைப்பற்றிய கட்சிகள் அந்தந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றனர்? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், வரும் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. திமுக - அதிமுக - தவெக- நாம் தமிழர் என முன் எப்போதும்  இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் மிகப்பெரிய பாேட்டி உருவாகியுள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சியமைத்த ஒவ்வொரு கட்சியினரும் தனியாக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர் என்பதை கீழே காணலாம். 

1. காங்கிரஸ்: ( 152)

1952ம் ஆண்டு சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் அப்போது மொத்தம் இருந்த 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 62 தொகுதிகளையும், கிஷான் மஸ்தூர் ப்ரஜா கட்சி 35 தொகுதிகளையும், சோசியலிச கட்சி 13 தொகுதிகளும் கைப்பற்றியது.

2. காங்கிரஸ் ( 1957)

இந்த தேர்தலில் மொத்தம் இருந்த 231 தொகுதிகளில் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று காமராஜர் முதலமைச்சர் ஆனார். ராஜகோபாலாச்சாரியின் சிஆர்சி 26 தொகுதிகளையும், திமுக 15 தொகுதிளிலும் வெற்றி பெற்றது.

3. காங்கிரஸ் ( 1962)

1962ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 231 தொகுதிகளில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் கடைசியாக ஆட்சியைக் கைப்பற்றியது இதுவே ஆகும். திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது.

4. திமுக ( 1967)

திமுக முதன்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது இந்த தேர்தல் ஆகும். 1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் 137 தொகுதிகளைக் கைப்பற்றி முதன்முறையாக மாநில கட்சியின் ஆட்சியை திமுக தமிழ்நாட்டில் பதிவு செய்தது. காங்கிரஸ் 51 தொகுதிகளை கைப்பற்றிய எதிர்க்கட்சியானது. 

5. திமுக (1971):

அண்ணா மறைவிற்கு பிறகு திமுக சந்தித்த முதல் பொதுத்தேர்தல் இதுவாகும். கருணாநிதி தலைமையில் சந்தித்த முதல் பொதுத்தேர்தலான இந்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையாக 137 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 15 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது.

6. அதிமுக ( 1977):

திமுக-வில் இருந்து பிரிந்து அதிமுக-வைத் தொடங்கிய எம்ஜிஆர் தான் சந்தித்த முதல் தேர்தலிலே அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த தேர்தலில் அதிமுக 144 தொகுதியில் வெற்றி பெற்று எம்ஜிஆர் முதன்முறையே முதலமைச்சர் ஆனார். திமுக 48 தொகுதிகள் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது.

7. அதிமுக ( 1980):

அதிமுக தாங்கள் சந்தித்த இரண்டாவது தேர்தலிலும் ஆட்சியைக் கைப்பற்றியது. 129 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. எம்ஜிஆர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார். திமுக இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 

8. அதிமுக ( 1984):

தமி்ழ்நாட்டில் தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சர் பதவியைப் பிடித்தவர் எம்ஜிஆர் என்ற வரலாற்றை இந்த தேர்தல் ஏற்படுத்தியது. அதிமுக இந்த தேர்தலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் 61 இடங்களில் வென்றது.

9. திமுக ( 1989):

எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு நடந்த இந்த தேர்தலில் திமுக 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 27 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. 

10. அதிமுக (1991):

ஜெயலலிதா கட்டுப்பாட்டில் முழுவதும் அதிமுக வந்த பிறகும், ராஜீவ்காந்தி மரணத்திற்கு பிறகும் நடந்த இந்த தேர்தலில் அதிமுக 164 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சர் ஆனார். திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது.

11. திமுக ( 1996):

1996ம் ஆண்டு நடந்த இந்த தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி மீது இருந்த அதிருப்தி காரணமாகவும், ரஜினிகாந்தின் ஆதரவாலும் திமுக 173 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தமாக 39 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக வெறும் 4 இடங்கள் மட்டுமே பெற்றது.

12. அதிமுக ( 2001):

2001ம் ஆண்டு நடந்த இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனார். இந்த தேர்தலில் அதிமுக 132 இடங்களில் தனித்து வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 31 இடங்களில் வெற்றி பெற்றது.

13. திமுக ( 2006):

இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி போன்ற திமுக-வின் வசீகரமான வாக்குறுதிகளால் திமுக 96 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக 61 தொகுதிகள் வெற்றி பெற்றது. காங்கிரஸ், பாமக-வின் ஆதரவுடன் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பு வகித்த கடைசி தேர்தல் இதுவே ஆகும்.

14. அதிமுக (2011):

2011ம் ஆண்டு நடந்த இந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மின்தடை, ஈழத்தமிழர் படுகொலை போன்ற காரணங்களால் திமுக மீது இருந்த அதிருப்தியால் 150 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது.  திமுக 23 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.

15. அதிமுக ( 2016):

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக. அதிமுக 232 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 88 இடங்களில் வெற்றி பெற்று மக்கள் நலக்கூட்டணியால் ஆட்சியைத் தவறவிட்டது.

16. திமுக ( 2021):

ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு தமிழ்நாடு சந்தித்த முதல் தேர்தலான இந்த தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சர் ஆனார். 66 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget