Senthil Balaji: கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் செந்தில் பாலாஜி, முகவர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறை- நடந்தது என்ன?
Tamil Nadu Election Results 2026: வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு, கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ஜனநாயகத் திருவிழாவுக்கு இன்று இறுதி நாள். ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவு எண்ணும் பணிகள் இன்று (மே 4) நடைபெற்று வருகின்றன.
இதில் கோவை தெற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்முறையாகப் போட்டியிடுகிறார், இதற்கிடையே கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு, கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் மஞ்சள் துண்டை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தார் செந்தில் பாலாஜி.
நடந்தது என்ன?
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில், திமுக பூத் ஏஜென்ட்கள் மஞ்சள் துண்டு அணிந்து வந்ததற்குப் போலீஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை அகற்றச் சொன்னது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக வாக்குப் பதிவின்போதும் இதேபோல மஞ்சள் துண்டு விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அதனை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மஞ்சள் அட்டைகளை அணிந்துசென்ற திமுகவினர்
குறிப்பாக கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அணிந்து வந்த மஞ்சள் துண்டிற்கும் போலீஸார் அனுமதி மறுத்து கழற்றச் சொன்னது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. துண்டுகள் அகற்றப்பட்ட போதிலும், சில திமுக முகவர்கள் மஞ்சள் நிற அடையாள அட்டைகளை அணிந்தபடி மையத்திற்குள் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















