மேலும் அறிய

MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

சட்டமன்ற தேர்தலில் திமுக-வின் வேட்பாளர்கள் சிலருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் மு.க.ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Assembly Election 2026: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தனி வாக்கு வங்கி வைத்துள்ள நாம் தமிழர் மற்றும் அரசியல் களத்தில் புதியதாக உள்ளே வந்துள்ள விஜய்யின் தவெக இடையே கடும் போட்டி நிலவியது. 

திமுக-வில் உள்ளடி:

ஆளுங்கட்சியான திமுக மீது மிகப்பெரிய அதிருப்தி அலை இல்லாவிட்டாலும் விஜய்யின் வருகை, எதிர்க்கட்சியின் கூட்டணி ஆகியவற்றில் பெரியளவு ஆதரவு அலையும் இல்லாத சூழலே இருந்தது. இந்த சூழலில், இந்த தேர்தலில் களமிறங்கிய திமுக வேட்பாளர்களில் பலரும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களாக, எதிர்கால திமுக ஆளுமைகளாக களமிறங்கினர். 

இது மூத்த அமைச்சர்கள் சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக தொடக்கம் முதலே தகவல் வெளியாகி வந்தது. இந்த சூழலில், தேர்தல் பரப்புரையின்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்கள் சிலருக்கு போதிய ஆதரவை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் வழங்கவில்லை என்றும், குறிப்பாக பரப்புரையின் கடைசி 3 நாட்களில் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

நேரில் அழைத்து விசாரித்த ஸ்டாலின்:

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வேட்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அப்போது, அவரும் இதுதொடர்பாக ஸ்டாலினிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, வருத்தத்தை தெரிவித்ததாக கூறப்படும் வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவாலயத்திற்கு அழைத்துள்ளார்.

அப்போது, அறிவாலயத்தில் அந்த வேட்பாளர்கள் அனைவரிடமும் பேசி அவர்களின் குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அப்போது, வேட்பாளர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரும் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மீது புகார்:

அவர்களில் அமைச்சர்கள் அன்பரசன், ஆவடி நாசர், சேகர்பாபு உள்ளிட்டோர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதனால், மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தேர்தல் முடிவுகளில் அது பிரதிபலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் சில இடங்களில் கட்சியினர் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், விஜய் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமையுமா? என்ற பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?

தலைப்பு செய்திகள்

Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Embed widget