மேலும் அறிய

விஜய்யை வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ்! “எல்லாமே ரத்து தான்” - செல்வப்பெருந்தகை விளாசல்!

ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினு தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தகவல்.

 “விஜய் என்றாலே எல்லாமே ரத்து தான்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இன்னும் இரண்டொரு நாட்களில் ராகுல் காந்தியும், முதல்வரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் நிகழ்ச்சி நிரலை அறிவிப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். விஜய் என்றாலே எல்லாமே ரத்து தான் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மீஞ்சூர் பஜாரில் பிரச்சாரம் செய்தார்.

மத்திய அரசுக்கு அடிபணியாதவர் முதல்வர்

அப்போது பேசிய அவர்,  முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், கற்றறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மாற்றியுள்ளார் எனவும், காலை உணவு திட்டம் மேலை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். பெஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பெயரை முதல்வர் எடுத்துள்ளதாகவும், ஒரு போதும் மத்திய அரசுக்கு அடிபணியாதவர் முதல்வர் எனவும், தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என முதல்வர் கூறியுள்ளதாகவும், எடப்பாடி அடிமை சாசனம் எழுதி கொடுத்தி விட்டார் எனவும், ஜெயலலிதா இருந்தவரை நீட், உதய் மின் திட்டம் வரவில்லை எனவும், தமிழ்நாட்டு உரிமைகளை விட்டு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் அவர் விமர்சித்தார்.

ரூ.2800 கோடியை கொடுக்காமல் போனாலும், 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளாதவர் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் கிளை கழகம் அதிமுக எனவும், அதிமுகவை எடப்பாடி அடகு வைத்து விட்டார் எனவும், சிலிண்டர் விலையை கண்டித்து நாடே போராடிய போதும், எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும், தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் வழக்குகளுக்கு பயந்து கூட்டணியில் உள்ளதாகவும், ஆயிரம் மோடிகள் வந்தாலும் எதிர்த்து நிற்பவர்கள் தங்களது கூட்டணியில் உள்ளவர்கள் எனவும் அவர் கூறினார்.

விஜய் என்றாலே எல்லாமே ரத்துதான்

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, இன்னும் இரண்டொரு நாட்களில் ராகுல் காந்தியும், முதல்வரும் தமிழகத்தில் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளோம், ஓரிரு நாட்களில் நிகழ்ச்சி நிரலை அறிவிப்போம் எனவும், காங்கிரஸ் 28 தொகுதிகளில் 100% வெற்றி பெறும் எனவும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 210 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும், எதிர்ப்பு அலை ஒருபுறமும், ஆதரவு அலை ஒருபுறமும் வீசி கொண்டிருப்பதாகவும், மோடிக்கும், பழனிசாமிக்கும்  எதிராக எதிர்ப்பு அலையும், ஸ்டாலினுக்கும், ராகுலுக்கும் ஆதரவான அலையும் வீசுவதாகவும், எதிர்ப்பு அலையை தாண்டி ஆதரவு அலை தமிழ்நாடு முழுவதும் 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனவும், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் 100% வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார். விஜயின் அடுத்தடுத்த பரப்புரை ரத்து குறித்த கேள்விக்கு, எல்லாமே ரத்து தான் எனவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
MadhuraMangalam Sipcot: ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
ரூ.175 கோடி, 20 ஏக்கர், ஆயிரக்கணக்கான வேலை - செமிகண்டக்டருக்காக பரந்தூர் அருகே CM விஜய் மெகா ப்ளான்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
TN Weather News: சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
Gold rate today : ஒரே நாளில் சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்தது.! வெள்ளி விலையும் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ...
ஒரே நாளில் சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்தது.! வெள்ளி விலையும் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ...
CM Vijay: அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
Embed widget