மேலும் அறிய

Salem corporation election 2022 | சேலம் மேயருக்கு ஸ்கெட்ச் போடும் திமுக, அதிமுக நிர்வாகிகள்...!

’’இதுவரை நடந்த 4 தேர்தல்களில் தலா 2 முறை திமுக மற்றும் அதிமுகவினர் மேயர் பொறுப்பை வகித்துள்ளனர்’’

சேலம் மாநகராட்சி பகுதியில் அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி என நான்கு மண்டலங்கள் உள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர் பதவிக்காக 618 பேர் போட்டியிடுகின்றனர். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,19,361 பேர் உள்ளனர்.

1994 ஆம் ஆண்டு சேலம் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த சூடாமணி சேலம் மாநகராட்சியில் முதல் மேயராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு சூடாமணி வெற்றி பெற்றார். 2001 நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் வெற்றி பெற்றார். அதன்பின் நடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி சேலம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவியேற்றார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் நேரடி மேயர் வேட்பாளர் சவுண்டப்பன் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதுவரை இரண்டு முறை திமுக மற்றும் அதிமுகவினர் மேயர் நாற்காலியை அலங்கரித்துள்ளனார். 

Salem corporation election 2022 | சேலம் மேயருக்கு ஸ்கெட்ச் போடும் திமுக, அதிமுக நிர்வாகிகள்...!

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 2வது வார்டில் போட்டியிடும் முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், 15வது வார்டு போட்டியிடும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட உமாராணி, 26வது வார்டில் போட்டியிடும் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கலையமுதன், 28வது வார்டில் போட்டியிடும் ஜெயகுமார் மற்றும் 52வது வார்டில் போட்டியிடும் அசோகன் உள்ளிட்டோருக்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு மேயர் பதவி கொடுக்கப்படும் என திமுக வட்டாரம் பேசி வருகிறது. துணை மேயர் பதவிக்கு திமுக கூட்டணியில் உள்ள 36வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்.ஆர்.சுரேஷ் மற்றும் 7வது வார்டில் போட்டியிடும் சாரதா தேவி உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Salem corporation election 2022 | சேலம் மேயருக்கு ஸ்கெட்ச் போடும் திமுக, அதிமுக நிர்வாகிகள்...!

அதிமுக சார்பில் போட்டியிடும் 21வது வார்டில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்தின் மகன் ஜனார்த்தனன், 34வது வார்டில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் மனைவி கோகிலா, 3வது வார்டில் போட்டியிடும் காட்சியின் மூத்த நிர்வாகி AKSM.பாலு மற்றும் 57வது வார்டில் போட்டியிடும் சண்முகம் போன்றோருக்கு அதிமுகவின் மேயராக வேட்பாளராக முன்மொழிய அதிக வாய்ப்புகள் உள்ளது. துணை மேயர் பதவிக்கு 40வது வார்டில் போட்டியிடும் உமா ராஜ், 36வது வார்டில் போட்டியிடும் அம்மாபேட்டை கழக செயலாளர் யாதவ மூர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட்  - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Embed widget