மேலும் அறிய

வெல்டிங் வைத்த வேட்பாளர்... அதிரும் விக்கிரவாண்டி! ஒர்க்‌ஷாப்பில் இறங்கி அசத்திய 'விசில்' வேட்பாளர்!

விக்கிரவாண்டி தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க இரும்பு ஆங்கிளுக்கு பெண்ட் எடுத்து நூதன முறையில் ஆதரவு திரட்டல்.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க இரும்பு ஆங்கிளுக்கு பெண்ட் எடுத்து நூதன முறையில் ஆதரவு திரட்டல்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் வினோதமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், விக்கிரவாண்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஒர்க்‌ஷாப்பில் புகுந்து வேலை செய்தபடி வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வித்தியாசமான தேர்தல் களம்

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட தென்மேற்கு செயலாளர் விஜய் வடிவேல் போட்டியிடுகிறார்.

மக்களைக் கவர்ந்த 'வெல்டிங்' ஸ்டைல்

இன்று பனையபுரம், தொரவி, சிறுவள்ளிகுப்பம், எஸ்.எஸ். பாளையம் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொரவி பகுதியில் உள்ள லாரி மற்றும் டிராக்டர் பாடி கட்டும் ஒர்க்‌ஷாப்பிற்குச் சென்ற வேட்பாளர் வடிவேல், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

திடீரென அங்கிருந்த இரும்பு ஆங்கிளுக்கு (Iron Angle) பெண்ட் எடுத்தும், வெல்டிங் மெஷினைப் பிடித்து இரும்புகளை இணைத்தும் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். "மாற்றத்தை உருவாக்க விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தவாறே அவர் செய்த இந்த 'டிங்கரிங்' வேலைகள், அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

மாற்றத்திற்காக விசில்

தனது பிரச்சாரத்தின் போது வேட்பாளர் விஜய் வடிவேல் பேசுகையில்:

"விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். அடித்தட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்த வேட்பாளராக நான் உங்களுடன் இருப்பேன். மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்."

வேட்பாளரே நேரடியாக ஒர்க்‌ஷாப் வேலைகளில் இறங்கி வாக்கு சேகரித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு சாதாரணத் தொழிலாளியைப் போல அவர் செயல்பட்ட விதம், அத்தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த நூதன முயற்சி?

பொதுவாக வேட்பாளர்கள் டீக்கடையில் டீ போடுவது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் ஒர்க்‌ஷாப் வேலையில் இறங்கி வேட்பாளர் வடிவேல் வாக்கு சேகரித்தது, அவர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருப்பதாகப் பொதுமக்களிடையே பேசப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget