மேலும் அறிய

தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் மீண்டும் விறுவிறுப்படைய உள்ளது.

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் மீண்டும் விறுவிறுப்படைய உள்ளது. கடந்த 9-ம் தேதி தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து, அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இருப்பினும் தொடக்க நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களோ, சுயேச்சை வேட்பாளர்களோ ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்யவில்லை.

இதனிடையே, கடந்த 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனுக்கள் பெறும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கல் மையம் பெரிய அளவில் பரபரப்பின்றி அமைதியாகவே காணப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியில் வழிபாடு

அரசு விடுமுறை நாட்களை வேட்பாளர்கள் தேர்தல் பணிகளுக்காக பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொண்டனர். வேட்புமனு படிவங்களைப் பெற்றுக்கொண்ட அவர்கள், தேர்தல் விதிமுறைகளின்படி தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தயார் செய்து வைத்துள்ளனர்.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தங்களது குலதெய்வ கோவில்களுக்கு எடுத்துச் சென்று வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்று, நாளை பிரம்மாண்ட ஊர்வலம்

ஆன்மிக வழிபாடுகளைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் களைகட்ட உள்ளன. வேட்பாளர்கள் தங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலமாகச் சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜோதிடர்கள் மற்றும் ஜோசியர்கள் தெரிவித்துள்ள நேரத்தின்படி, நல்ல நேரத்தில் மனுக்களை தாக்கல் செய்யவும் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் இன்று முதல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேட்புமனுக்கள் பெறப்படும் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்.16 மாலை 3 மணி ஆகும்.

செப்.17-ல் வேட்புமனு பரிசீலனை

பெறப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் வரும் செப்.17-ம் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படுகின்றன. தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் இந்த பரிசீலனை நடைபெறும். தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய பிரதிநிதிகள் மட்டுமே வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

செப்.19-ல் வாபஸ் பெற கடைசி நாள்

பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்படும் வேட்புமனுக்களில், போட்டியிலிருந்து விலக விரும்பும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெறலாம். இதற்கான கடைசி நாள் செப்.19 மாலை 3 மணி ஆகும். வேட்புமனுவைத் திரும்பப் பெற விரும்புவோர் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலு ஆகியோரிடம் அதற்கான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். வாபஸ் பெறும் காலக்கெடு முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படும்.

அக்.6-ல் வாக்குப்பதிவு; அக்.9-ல் வாக்கு எண்ணிக்கை

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், பதிவான வாக்குகள் 9-ம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் களமிறங்க உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் தொகுதியில் தேர்தல் பரபரப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெபாசிட் தொகை எவ்வளவு?

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.10,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதேபோல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு வேட்பாளர்களுக்கு ரூ.5,000 வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறும் வேட்பாளர்களின் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும். இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றி மட்டுமின்றி, குறைந்தபட்ச வாக்கு சதவீதத்தைப் பெறுவதும் முக்கிய சவாலாக இருக்கும். வேட்புமனு தாக்கல் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதால், தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget