மேலும் அறிய

தாராபுரம் வரார் விஜய்! வெற்றியை முதல்வருக்கு காணிக்கையாக்குவேன் - சத்யபாமா சபதம்

தாராபுரம் தொகுதியின் வெற்றியை முதல்வர் விஜய் உடைய பாதங்களில் காணிக்கையாக்குவேன் - வேட்பாளர் சத்யபாமா

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் விஜய் விரைவில் தாராபுரம் வர உள்ளதாகவும், இந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி என்றும் வேட்பாளர் சத்யபாமா தெரிவித்துள்ளார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்தியபாமா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில், தாராபுரம் தொகுதியில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த கட்சியின் தலைவர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத்தொகுதியின் வெற்றியை அவருடைய பாதங்களில் காணிக்கையாக்குவேன்.

தவெகவில் ஏன் இணைந்தேன்?

திமுக கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், முந்தைய ஆட்சிக் காலத்தின் குளறுபடிகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாகவே அக்கூட்டணியில் இருந்து விலகி, மக்களுக்கு நேர்மையாகச் சேவை செய்யும் நோக்கில் தவெகவில் இணைந்தேன். இங்கு எவ்விதக் குதிரை பேரமும் நடைபெறவில்லை என்பதற்கு எனக்கு மீண்டும் சீட் கொடுத்ததே சான்றாகும். கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாபெரும் வெற்றி பெறும்.

 

உப்பாறு அணைக்கு விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய உபரிநீரைப் பெற்றுத் தரத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அதேபோல, முந்தைய திமுக ஆட்சியில் தாராபுரத்திற்கு வர வேண்டிய உயர்தர அரசு தலைமை மருத்துவமனை அப்போதைய அமைச்சரின் கவனக்குறைவால் காங்கேயத்திற்குச் சென்றது. 
அதை மீண்டும் தாராபுரத்திற்குக் கொண்டுவர அரசிடம் வலியுறுத்தப்படும்.

தாராபுரம் வரும் முதல்வர் விஜய்

கடந்த 25 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தீர்க்கப்படாத 40 ஆண்டுகால இலவச வீட்டுமனைப் பட்டா கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண, தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. விரைவில் தவெக தலைவர் விஜய் தாராபுரத்திற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Embed widget