மேலும் அறிய

தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஏன் ஆதரவு இல்லை? ஏன் தனித்து போட்டியிடுகிறது என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கமளித்துள்ளது.

வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் இணைந்து போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாராபுரம் தொகுதியில் சிபிஐ, மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் களம் காண்கின்றன.

சென்னை பாலன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன்

தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கும் கட்சியின் நிலைப்பாடு தொடரும் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனக் குற்றம்சாட்டிய அவர் இடதுசாரிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டின்படி தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. தாராபுரம் தொகுதிக்கான வேட்பாளர் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் அறிமுகக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் இணைந்து அறிவிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் எனக் குறிப்பிட்ட அவர் அரசின் தவறுகளையும் குறைபாடுகளையும் மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். இடதுசாரிகள் இணைந்து போட்டியிடும் இந்த அறிவிப்பு, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் தவெகவிற்கு ஆதரவு இல்லை?

அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது ஆரோக்கியமற்ற அரசியல் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைவது எந்த விதத்தில் நியாயம்? எனக் கேள்வி எழுப்பிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முக , இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட தேர்தல்; இதில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு என்று கூறினார். மேலும், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும் என்றும் அதேபோல, தவெகவுக்கு ஆதரவளிக்காமல் இடதுசாரிகள் போட்டியிடுவது திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடல்ல என்றும் கூறினார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்கள் வாக்குச்சாவடி இடம் மாறியுள்ளதா? தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..
உங்கள் வாக்குச்சாவடி இடம் மாறியுள்ளதா? தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் - முழு விவரம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் - முழு விவரம்!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget