மேலும் அறிய

Prashant Kishor: "விஜய்தான் வெற்றி பெறுவார்.." அன்றே அடித்துச் சொன்ன பிரசாந்த் கிஷோர்!

ஜன்சுராஜ் கட்சித் தலைவரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டில் விஜய்தான் வெற்றி பெறுவார் என்று திட்டவட்டமாக ஏற்கனவே கூறியிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil Nadu Election Results: தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. 

ஆட்சியைக் கைப்பற்றப்போகும் தவெக?

தற்போது வரை தனிப்பெரும்பான்மையை தவெக பெறாவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகத்தினர் தனிப்பெரும்பான்மையை பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. தற்போது வரை 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள தவெக ஆட்சியைப் பிடிக்க 118 தொகுதிகள் தேவைப்படுகிறது. மற்ற கட்சியினர் யாரேனும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அன்றே கணித்த பிரசாந்த் கிஷோர்:

இந்த சூழலில், விஜய் வெற்றி பெறமாட்டார் என்று பலரும் கருதிய நிலையில் அவர், "கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்பார் என்று தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் விஜய்யே கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்பார் என்று ஆரம்பம் முதலே திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் அவர் அளித்த பேட்டியில், விஜய் தனித்து நின்றால் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தரவுகள் சொல்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதை பதிவு செய்துகொள்ளுங்கள். தேர்தல் முடிவுகளின்போது பாருங்கள்.

தீவிரமாக உழைத்தால், அவரது கட்டமைப்பை வலுப்படுத்தினால், திமுக அதே கூட்டணியுடன் தொடர்ந்தால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். விஜய்க்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அவர் கடுமையான களப்பணியாற்றினால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும்."

இவ்வாறு அவர் கூறியிருந்தார். தான் கூறியதை பத்திரமாக வைத்து விஜய்யின் வெற்றிக்கு பிறகு ஒளிபரப்புமாறும் கூறியிருந்தார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர்:

பிரசாந்த் கிஷோர் 2014ம் ஆண்டு மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருந்தவர். இந்த தேர்தலில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக வகுப்பாளராக பணியாற்ற முதலில் ஒப்பந்தமானார். பின்னர், அவர் சில காரணங்களால் விலகினார்.

இருப்பினும், அவர் விஜய்யே கணிப்பார் என்று கணித்திருந்தார். இந்த சூழலில், அவரது கணிப்பின்படியே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றும் சக்தியாக விஜய் உருமாறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, பலரும் திமுக-வே வெற்றி பெறுவார் என்று கணித்திருந்தனர். ஆனால், சிலர் மட்டுமே விஜய் வெற்றி பெறுவார் என்று கணித்திருந்தனர்.

மோடி முதன்முறையாக பிரதமர் ஆவதற்கு மிகப்பெரிய பக்கபலமாக பிரசாந்த் கிஷோர் இருந்து வந்த நிலையில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், இந்திய காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளுக்கு பணியாற்றியுள்ளார்.

அதிர்ச்சியில் திமுக, அதிமுக:

இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக-விற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை விஜய் இந்த தேர்தலில் அளித்துள்ளார். திமுக-வின் மிகவும் பலமிகுந்த வேட்பாளர்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். இதனால், அவர் தோல்வி அடையும் சூழல் உண்டாகியுள்ளது. 

விஜயின் மாஸ்..! கார் ஓட்டுனரின் மகனுக்கு கிடைத்த அந்தஸ்து - விருகையில் திமுகவை அலறவிட்ட சபரிநாதன்

தலைப்பு செய்திகள்

TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Embed widget