மேலும் அறிய

காலை 6 மணிக்கே மது விற்பனை... "நடவடிக்கை எடுக்கும் வரை நகர மாட்டேன்” கொடுங்கையூரில் தட்டிக்கேட்ட பாமக வேட்பாளர்

விடியற்காலை 6 மணிக்கே திறந்து வைத்து, விடிய விடிய விற்பனை நடப்பதை சுட்டிக்காட்டிய திலகபாமா, இதனை காவல்துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர்.

கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி காலை 6 மணிக்கே மது விற்பனையை நடந்ததை பாமக வேட்பாளர் திலகபாமா தட்டிக்கேட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா இன்று காலை கொடுங்கையூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வியாசன் நகர் நான்காம் எண் டாஸ்மாக் கடையில் விடியற்காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருவதை கண்டறிந்தார். அப்போது டாஸ்மாகிற்கு அருகே அமைந்துள்ள கே.ஜி.எஃப் பாரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடந்து வருவது தெரியவந்தது. 

உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த திலகபாமா, போலீசார் வரும் வரை அங்கேயே காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் இந்த டாஸ்மாக் கடை தினமும் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதற்கு காவல்துறையும் உடைந்தை என குற்றச்சாட்டினர். திலகபாமாவின் புகாரை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். 

உள் பக்க அறையை பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்த டாஸ்மாக் ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என திலகபாமா கறாராக தெரிவித்ததால், செய்வதறியாது திகைத்த போலீசார் அறையை திறக்க மீண்டும், மீண்டும் முயற்சித்தனர். அரசு விதித்த நேரப்படி 12 மணிக்கு திறந்திருக்க வேண்டிய மதுபானக்கடையை, விடியற்காலை 6 மணிக்கே திறந்து வைத்து, விடிய விடிய விற்பனை நடப்பதை சுட்டிக்காட்டிய திலகபாமா, இதனை காவல்துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர்.

உடனடியாக அவரை சமாதானம் செய்த போலீசார், இனி எக்காரணம் கொண்டும் இந்த டாஸ்மாக் கடையை இயங்க விடமாட்டோம் என உறுதியளித்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டார். நடுத்தர மக்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் அதிகமுள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இப்படி 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருவது அப்பகுதியில் தொடர்கதையாகி வந்த நிலையில், இதனை துணிச்சலுடன் தட்டிக்கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget