PM Modi TN Visit LIVE: இனி தமிழ் மொழியில் பிரதமர் உரை - அண்ணாமலை
PM Modi TN Visit LIVE Updates: பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இந்நிகழ்வு தொடர்பான உடனடித் தகவல்களை ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகைதரவுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இந்த நிகழ்வினையொட்டி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகப்பு பணியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியான அகதீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதால் இங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விமானம் மூலம் கேரளா மாநில திருவனந்த புரத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தன் ஹெலிகாப்ட்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கி, அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகின்றார். இந்த நிகழ்வில் பாஜகவினர் மட்டும் இல்லாமல் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய பின்னர் பிரதமர் மோடி நண்பகல் 12.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வந்து, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்ட்டர் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவுக்குச் செல்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகைதரவுள்ளார். இதில் அரசு நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து கலந்துகொண்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடி ஒவ்வொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவை மிகவும் காட்டமாக விமர்சித்துச் செல்கின்றார். கடந்த முறை தமிழ்நாடு வந்தபோது திமுகவை ஒழிப்பேன் எனக் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்திற்கு திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மிகவும் காட்டமான விமர்சனத்தை பதிலாகக் கொடுத்திருந்தார். குறிப்பாக, “ திமுகவை நாங்கள் ரத்தம் சிந்தி உருவாக்கியுள்ளோம். திமுகவை ஒழிப்பேன் என்பவர்கள் வரலாற்றில் காணாமல் போய் உள்ளனர். ஆனால் திமுக இப்போதும் உள்ளது, எப்போதும் இருக்கும். பிரதமர் மோடியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். நான் அமைச்சராக இருப்பதால் பொறுமையாக இருக்கின்றேன். இல்லை என்றால் பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்” என கூறியிருந்தார். இதனை காரணம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார், “பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக” வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டும் இல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமரின் தமிழ்நாடு வருகையை பல காரணங்களை முன்வைத்து விமர்சித்து வருகின்றார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும், தென்மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத பிரதமர் தற்போது மட்டும் வருவது ஏன்? தேர்தலுக்காகவா? வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ஒரு ரூபாய் கூட தராத பிரதமர் இப்போது மட்டும் வருவது ஏன்? என கேள்விகளை கேட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர், வரும் 18ஆம் தேதி கோவைக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PM Modi TN Visit LIVE: நமோ செயலியில் தமிழில் பேசும் பிரதமர்
நமோ செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமரின் அனைத்து உரைகளும் தமிழில் வெளியாகும் என அண்ணாமலை தெரிவித்டுள்ளார்.
PM Modi TN Visit LIVE: மகளிரை பாஜக மதிக்கும்; மகளிரை இண்டியா கூட்டணி மதிக்காது - பிரதமர் மோடி
மகளிரை மதிக்கும் கட்சி என்றால் அது பாஜக மட்டும்தான். திமுக - காங்கிரஸ் கூட்டணி மகளிரை மதிக்காது என பிரதமர் விமர்சித்துள்ளார்.
PM Modi TN Visit LIVE: திமுக - காங்கிரஸ் செய்த பாவத்திற்கு பதில் சொல்ல வேண்டும் - பிரதமர்
திமுக - காங்கிரஸ் இணைந்து செய்த பாவங்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
PM Modi TN Visit LIVE: மீனவர்கள் தண்டிக்கப்படுவது யாரால்? - பிரதமர் மோடி
மீனவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் யார் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
PM Modi TN Visit LIVE: எதிர்கட்சிகளுக்கு தூக்கம் இல்லை - பிரதமர்
கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள அலையைப் பார்த்து டெல்லியில் உள்ள எதிர்கட்சிகளுக்கு தூக்கம் இல்லை என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.