மேலும் அறிய

Perambur: "விஜய் முதல் திலகபாமா வரை.." ஸ்டார் தொகுதி பெரம்பூரில் 48 பேர் போட்டி!

தமிழ்நாட்டில் நட்சத்திர தொகுதியாக உருவெடுத்திருக்கும் பெரம்பூரில் விஜய், ஆர்டி சேகர், திலகபாமா உள்பட 48 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் மீது தனி கவனம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் நடிகர் விஜய். 

நட்சத்திர தொகுதி பெரம்பூர்:

தவெக தலைவரான விஜய் இந்த முறை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 66 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 48 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

விஜய் முதல் திலகபாமா வரை:

இந்த தொகுதியில் முக்கிய போட்டியாளராக கருதப்படும் தவெக தலைவர் விஜய், திமுக -வின் வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏ-வான ஆர்டி சேகரும், அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் வேட்பாளர் வெற்றித் தமிழன் ஆகிய நான்கு பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த முறை பெரம்பூர் தொகுதி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான எதிர்பார்ப்பை தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் பெரம்பூர் தொகுதியில் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக வேட்பாளரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். பாமக வேட்பாளர் திலகபாமாவும் தினசரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றித் தமிழனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

48 பேர் போட்டி:

இந்த தொகுதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தம் 48 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். 17 பேர் வேட்புமனுக்கள் நீிராகரிக்கப்பட்டுள்ளது. சென்னை திமுக-வின் கோட்டையாக திகழ்ந்து வரும் நிலையில், திமுக-விற்கு சவால் அளிக்கும் வகையில் ஒவ்வொரு வேட்பாளரும் இருப்பதால் பெரம்பூர் தொகுதியில் மிக கடுமையான போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது.

சென்னையில் அதிகளவு வாக்காளர்கள் உள்ள பட்டியலில் பெரம்பூர் 2வது இடத்தில் உள்ளது. பெரம்பூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இன்னும் நேரடி பரப்புரையில் ஈடுபடாத நிலையில், முக்கிய தலைவர்களில் ஒருவரான அன்புமணி ராமதாஸ் மட்டும் விஜய் உள்ளிட்ட பிற வேட்பாளர்களுக்கு எதிராகவும், தனது கட்சி வேட்பாளர் திலகபாமாவிற்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார்.

தலைப்பு செய்திகள்

"விஜய் படம் ஒட்டாத வீட்டில் ஓட்டு விழாது" - தவெக வேட்பாளர் சத்யபாமா சர்ச்சை பேச்சு
தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு
தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
DMK Master Plan : ‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
Splendor Plus on EMI: வெறும் ரூ.2,000 EMI-ல ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்க வாங்க முடியுமா.? இதோ அதுக்கான ஃபைனான்ஸ் பிளான்
வெறும் ரூ.2,000 EMI-ல ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்க வாங்க முடியுமா.? இதோ அதுக்கான ஃபைனான்ஸ் பிளான்
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Trump Vs Iran: உனக்கு ரொம்பதான்யா லொள்ளு.! “ஈரான் தீவிரமா தான் இருக்கு, ஆனா நான் தான்..“ இழுத்தடிக்கும் ட்ரம்ப்
உனக்கு ரொம்பதான்யா லொள்ளு.! “ஈரான் தீவிரமா தான் இருக்கு, ஆனா நான் தான்..“ இழுத்தடிக்கும் ட்ரம்ப்
Embed widget