மேலும் அறிய

Durai Vaiko: விஜய் மேல சந்தேகமா இருக்கு.. புயலை கிளப்பிய துரை வைகோ பேச்சு.. நடந்தது என்ன?

நடிகர் விஜய் மிகப்பெரிய பிரபலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவரை ரசிக்குற இளைஞர்கள் கூட்டம் உள்ளது. அதை மறுக்க முடியாது என மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு பல்வேறு வகையில் அநீதி இழைக்கும்போதெல்லாம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். 

தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை மதிமுகவின் முதன்மை செயலாளராக நான் வரவேற்கிறேன். இந்த தேர்தல் மிகவும் சவாலானது. ஒரு பக்கம் மதவாத பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது. மறுபக்கம் ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. இந்த கூட்டணியில் எங்கள் பக்கம் தேமுதிக வந்து சேர்த்துள்ளது. 

இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இதனைப் பார்த்து சந்தோஷமா பட முடியும். அவர் தன் கருத்தை சொல்லியுள்ளார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்தவொரு இயக்கமும் எங்கள் கூட்டணியில் சேருவது என்பது மகிழ்ச்சி தான்.

கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை

தொடர்ந்து ஆட்சியில் பங்கு பற்றிய கேள்விக்கு,  ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு நிலைப்பாடு என்பது உள்ளது. எங்களைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை. மதிமுக தரப்பில் அப்படி ஒரு கோரிக்கையை நாங்கள் வைக்க மாட்டோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அதை சொல்லிவிட்டேன். 

தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி என்ற ஒன்று இருந்ததில்லை. இப்போதைய குழப்பமான சூழலில் அதனைக் கேட்பது நல்லது கிடையாது என எங்களுடைய நிலைப்பாட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார் என துரை வைகோ கூறினார்.

விஜய் மீது சந்தேகம்

இதனையடுத்து தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய் மிகப்பெரிய பிரபலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவரை ரசிக்குற இளைஞர்கள் கூட்டம் உள்ளது. அதை மறுக்க முடியாது. அதேசமயம் அவர் பாஜகவை மதவாத சக்தி என எதிர்க்கிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் கொடுக்காதது, நிதி அளிக்காதது, எஸ்.ஐ.ஆர். பிரச்னை  போன்ற அநீதிகள் நடக்கும்போது விஜய் எந்தவித கருத்தையும் தெரிவிக்க மறுக்கிறார். பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். அந்த நேரத்தில் பேசாதது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

அவர் தேர்தலில் 15 சதவிகிதம் வரை வாக்குகள் பெறுவார் என்ற யூகம் உள்ளது. அவர் கொள்கை நன்றாக உள்ளது என்றாலும், அதன்படி அவர் செயல்படுவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். ஆனால் அந்த வாக்குகள் வெற்றியா மாறுமா என்பது இனிதான் தெரிய வரும். விஜய் பிரிக்கும் வாக்குகள் எங்கள் கூட்டணியின் வெற்றியை எளிதாக்கும் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget