மேலும் அறிய

தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

மயிலாடுதுறை நியாயம் செய்யப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் பார்வையாளர்களிடம் மொபைல் எண்கள் மற்றும் புகார் அளிக்கும் முறைகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை இவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

விரிவான ஏற்பாடுகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 160. சீர்காழி (தனி), 161. மயிலாடுதுறை மற்றும் 162. பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னேற்பாட்டுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலின் போது விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் செலவினங்களை முறைப்படுத்தவும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளைப் பார்வையாளர்களாக ஆணையம் நியமித்துள்ளது.

பொதுப் பார்வையாளர்கள் (General Observers)

தொகுதியின் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்காகத் தொகுதி வாரியாகப் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் பின்வருமாறு

* 161. மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி

இத்தொகுதிக்கு நேஹா ஷர்மா, இ.ஆ.ப பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் இவரை 7339227810 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.

* 162. பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

 இத்தொகுதிக்கு சஞ்சய்குமார் சிங் யாதவ், இ.ஆ.ப., பொதுப் பார்வையாளராகப் பொறுப்பேற்றுள்ளார். இவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: 7200957363.

* 160. சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதி

இத்தொகுதிக்கு ரோணங்கி குருமநாத், இ.ஆ.ப., பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 7338821810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் செலவின பார்வையாளர்கள் (Expenditure Observers)

வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்கும், பணப்புழக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பதற்கும் இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (IRS) செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:

* சீர்காழி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகள்

இவ்விரு தொகுதிகளுக்கும் சேர்த்து ரூபேஷ் அகர்வால், ஐ.ஆர்.எஸ். செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 6385161810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

* பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

இத்தொகுதிக்கு நர்சிங்குமார் கல்கோ, ஐ.ஆர்.எஸ். செலவின பார்வையாளராகப் பணியாற்றுகிறார். இவரை 7397474810 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு செலவினம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

 "மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள்.

 வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவது குறித்துத் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட எண்களில் பார்வையாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்களையும் இவர்களிடம் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம். புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்."

புகார் அளிக்கும் முறை

பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தொலைபேசி வழியாக மட்டுமன்றி, பார்வையாளர்களை தங்கியிருக்கும் முகாமிற்கு நேரில் சென்றும் சந்திக்கலாம். இதற்கான நேரம் மற்றும் இடங்கள் குறித்த விவரங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காணிப்புப் பணிகளுக்காக மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கனவே 24 மணி நேரமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு இணைந்து தேர்தல் பார்வையாளர்கள் செயல்படுவதால், மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகத் திருவிழாவில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Best Selling SUV: விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
MK STALIN : ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Gold and silver rate today : அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
Embed widget