மேலும் அறிய

போகிற இடமெல்லாம் போர்க்கொடி... திகைத்துப் போய் நிற்கும் திமுக சிட்டிங் எம்எல்ஏ..!

பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளர் நிவேதா முருகனை, குடிநீர் பிரச்சனை தொடர்பாக மாம்புள்ளி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய தொகுதியாகக் கருதப்படும் பூம்புகாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மாம்புள்ளி கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளர் நிவேதா முருகனை, குடிநீர் பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி மோதலில் பலப்பரீட்சை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளில், பூம்புகார் தொகுதி மட்டும் ஒரு தனித்துவமான போர்க்களமாக மாறியுள்ளது. மயிலாடுதுறை இத்தொகுதியில் தான் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இங்கு மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டியானது பிரதானமாக இரு முனைப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக சார்பில்: மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் ஐந்தாவது முறையாகக் களமிறங்குகிறார்.

திமுக சார்பில்: தற்போதைய எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன் இரண்டாவது முறையாகத் தனது வெற்றியைத் தக்கவைக்கப் போட்டியிடுகிறார்.

மாம்புள்ளி கிராமத்தில் திடீர் பரபரப்பு

இந்நிலையில் திமுக வேட்பாளர் நிவேதா முருகன், தனது கூட்டணி கட்சியினருடன் குத்தாலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் புடைசூழ, உற்சாகமாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாலை வேளையில் மாம்புள்ளி கிராமத்திற்குள் நுழைந்தார்.

அங்குள்ள மாதா கோவில் தெரு பகுதியில் வேட்பாளர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேட்பாளரின் வாகனத்தை மறித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பதற்றம் நிலவியது.

"காவி நிறத்தில் குடிநீர்" - பொதுமக்கள் ஆவேசம்

வேட்பாளரை வழிமறித்த கிராம மக்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக, குடிநீர் விநியோகம் குறித்துப் பேசிய பெண்கள், "ஐந்து வருடங்களாக எங்கள் பகுதிக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. குழாய்களில் வரும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில், காவி நிறத்தில் (துரு ஏறிய நிலையில்) வருகிறது. இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது வாக்கு கேட்டு மட்டும் எப்படி வருகிறீர்கள்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

சமாதானப்படுத்த முயன்ற திமுகவினர்

மக்களின் இந்தத் திடீர் எதிர்ப்பால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஆத்திரமடைந்த மக்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் வாக்கு கேட்க வரக்கூடாது எனத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சலசலப்பிற்குப் பிறகு, வேட்பாளர் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. "குடிநீர் விநியோகத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்படும் என்றும், காவி நிறத்தில் தண்ணீர் வருவது குறித்துத் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துத் தூய்மையான குடிநீர் வழங்க உறுதியளிக்கிறோம்" என்றும் கூறி மக்களைச் சமாதானம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஒருவாறாகச் சமாதானமடைந்த மக்கள் வேட்பாளரைச் செல்ல அனுமதித்தனர். அதன் பின்னரே நிவேதா முருகன் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

பரபரப்பான அரசியல் சூழல்

பூம்புகார் தொகுதியில் ஏற்கெனவே ஐந்து முறை போட்டியிட்ட அனுபவம் கொண்ட பவுன்ராஜ் (அதிமுக) ஒருபுறம் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், ஆளுங்கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான நிவேதா முருகனுக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் இதே நிலை நீடிப்பது, மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

"அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் பிரச்சனை போன்ற வாழ்வாதாரக் கோரிக்கைகள் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன" என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பூம்புகார் தொகுதியில் நிலவும் இந்த நேரடிப் போட்டியில், மக்களின் அதிருப்தி யாருக்குச் சாதகமாக அமையும் என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
விஜய்க்கு ஸ்டாலின் போட்ட கணக்கு... சவால் விடும் இடதுசாரிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!
விஜய்க்கு ஸ்டாலின் போட்ட கணக்கு... சவால் விடும் இடதுசாரிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
விஜய்க்கு ஸ்டாலின் போட்ட கணக்கு... சவால் விடும் இடதுசாரிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!
விஜய்க்கு ஸ்டாலின் போட்ட கணக்கு... சவால் விடும் இடதுசாரிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!
Conspiracy against TVK Government : 'தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி தம்பி சதி’ போலீஸ் பரபரப்பு அறிக்கை..!
Conspiracy against TVK Government : 'தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி தம்பி சதி’ போலீஸ் பரபரப்பு அறிக்கை..!
Aadi Month Rasi Palan: பண வரவும், திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகும் ராசிகள்! 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசி பலன்
பண வரவும், திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகும் ராசிகள்! 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசி பலன்
வைகோவுடன் சேர்ந்து சிஎம் விஜய் குதிரை பேரம்.! கூட்டுச்சதி செய்திருக்காங்க- ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்
வைகோவுடன் சேர்ந்து சிஎம் விஜய் குதிரை பேரம்.! கூட்டுச்சதி செய்திருக்காங்க- ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
Embed widget