மேலும் அறிய

தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. மீனாட்சியம்மன் கோயிலில் செல்லூர் ராஜு சிறப்பு பிரார்த்தனை !

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் செல்லூர் ராஜு.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான செல்லூர் கே. ராஜு தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
 
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விரிவாகப் பேசினார். முன்னதாக, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்ற செல்லூர் ராஜு, மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
விலைவாசியைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
 
தமிழகத்தில் எந்தக் கட்சி எத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையே இந்தத் தேர்தலின் உண்மையான கதாநாயகனாக திகழ்கிறது. எடப்பாடியார் எதைச் சொல்வாரோ அதைச் செய்வார், எதைச் செய்வாரோ அதைத்தான் சொல்வார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விலைவாசியைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதே அதிமுகவின் இலக்கு. தமிழகத்தில் அமைதியான சூழலையும், பாதுகாப்பான சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.
 
திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை அதிமுக உறுதி செய்யும்
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதி உதவிகள் மற்றும் ரேஷன் கார்டுதாரர்களுக்கான கூப்பன்கள் போன்ற திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை அதிமுக உறுதி செய்யும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானது. எடப்பாடியாரின் திட்டங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் என்னதான் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், மக்கள் அதிமுகவின் பக்கமே நிற்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வரும்போது அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வராவது உறுதி, எனத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
 
தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget