மேலும் அறிய

வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் மதுரை.. மே 4-ஆம் தேதி ஐந்து இடங்களில் வாக்கு எண்ணிக்கை  !

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்குப் பதிவில் மதுரை மாவட்டம் 80.52 சதவீதம் பதிவு பெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை 4-ஆம் தேதி ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி, மதுரை அண்ணா பல்கலைக்கழக வளாகம், தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை கல்லூரி மற்றும் கப்பலூர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற உள்ளது. 

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்குப் பதிவில் மதுரை மாவட்டம் 80.52 சதவீதம் பதிவு பெற்றுள்ளது.
 
மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் 79.90 %,
 
மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுயில் 72.63 %,
 
மதுரை தெற்கு சட்ட மன்ற தொகுதியில் 78.19%,
 
மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதியில் 77.77%,
 
மதுரை மத்திய சட்ட மன்ற தொகுதியில் 73.88 %,
 
மேலூர் சட்ட மன்ற தொகுதியில்  82.22%, 
 
சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியில் 87.23%
 
 திருமங்கலம் சட்ட மன்ற தொகுதியில் 87.03%,
 
திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் 81.41%,
 
உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதியில் 82.95%
 
என வாக்குகள் பதிவாகியுள்ளன. மிக அதிகபட்சமாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதியிலும் (87.23%), குறைவாக மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் (72.63%) வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
மின்னணு வாக்குப்பதிவு
 
இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் (VVPAT) ஆகியவற்றை பாதுகாப்பாக சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு மதுரா கல்லூரி மற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்  மையங்களுக்கு கொண்டு வரப்படுவதையும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பறையில் (Strong Room) வைக்கப்பட்டு வரும் பணிகளை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
மதுரையில் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
 
வருகின்ற மே 4ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை  பின்வருமாறு, மேலூர் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஒத்தக்கடையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரியிலும், சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மதுரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலும், மதுரை மத்தி மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மதுரை கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் நடைபெற உள்ளன.

தலைப்பு செய்திகள்

Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget