மேலும் அறிய
தற்காலிக வெற்றியை தகத் தெறிந்து முன்பை விட அதிகமாக மக்களுக்கு பணியாற்றுவோம் - ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை !
தற்காலிக வெற்றியை தகத் தெறிந்து முன்பை விட அதிகமாக மக்களுக்கு பணியாற்றுவோம். - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி.

ஆர்.பி.உதயகுமார்
Source : whatsapp
எங்களையும் மக்களையும் யாராலும் பிரிக்க முடியாது வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் மக்களின் சேவைக்காக, வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில்
உயிரின் மேலான ரத்த சொந்தங்களான திருமங்கலம் வாக்காள பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்ற அண்ணாவின் கொள்கைப்படி மக்கள் சேவையே மகேசன சேவை என்பதை போல வெற்றியோ, தோல்வியோ அதிமுகவின் மக்கள் சேவைக்கு அது தடை கற்கலாக இருக்காது . கடந்த பத்து ஆண்டுகளாக அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக அனுமதித்த மக்களையும், அதிமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. தற்போது தற்காலிக தடைகளைத் தகர்த்தெறிந்து வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரின் நல்லாசியுடன் திருமங்கலம் தொகுதி மக்களுக்கும், மதுரை மாவட்ட வளர்ச்சிக்கும், தமிழ்நாடு வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொய்வின்றி முன்பை விட ஆழமாக, உறுதியாக, விசுவாசத்துடன் மக்களுக்கு பணியாற்றுவோம்.
களத்தில் மக்களோடு கைகோர்த்து நின்று போராடுவோம்.
தொடர்ந்து எதிர்க்கட்சியாக முன்வைவிட களத்தில் சேவையை தொடருவோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை, ஆளுங்கட்சி அரசிடம் பெற்றுத் தர கோரிக்கை வைப்போம் களத்தில் மக்களோடு கைகோர்த்து நின்று போராடுவோம். ஆளும் கட்சியாக அதிகாரத்தில் இருந்த பொழுது திட்டங்களை, மக்கள் தேவைகளை இல்லத்தில் கொண்டு சேர்த்து மக்கள் இதயங்களில் இடம் பிடித்தோம். அதுபோல ஆளுங்கட்சி செய்ய தவறியதை சுட்டிக்காட்டி வளர்ச்சி திட்டங்களை பெற்றுத்தர முன்பை விட வேகமாகவும், விசுவாத்துடன் நாங்கள் பணியாற்றுவோம். நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion


















