மேலும் அறிய

PM Modi Speech: "தி.மு.க. தமிழ்நாட்டின், தமிழ் பண்பின் எதிரி" : பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு

PM Modi Speech: தி.மு.க. தமிழ் பண்பின் மற்றும் தமிழ்நாட்டின் எதிரி என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரத்தில் பா.ஜ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது,

"கன்னியாகுமரி எப்போதும் பா.ஜ.க.விற்கு ஏராளமான அன்பை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணி எப்போது வாய்ப்பு கிடைக்கும்? இங்குள்ள மக்களை சுரண்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவர்கள் நடவடிக்கையை கடந்த 20 ஆண்டுகளாக பார்த்தால் அவர்கள் எண்ணம் நமக்கு புலப்படும்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி:

ஆனால், நம் அடல்பிகாரி வாஜ்பாய் வடக்கு – தெற்கு வழித்தடத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். கன்னியாகுமரி நரிப்புறம் பாலம் பல ஆண்டுகளாக அவர்கள் நிறைவேற்றாமல் இருந்தார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதை நாங்கள் நிறைவேற்றினோம்.

இங்குள்ள அரசு கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை அமைக்க அனுமதி கூட கொடுக்கவில்லை. அதற்காக கூடுதல் நிதி கொடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் பணியைத் தொடங்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை செய்து முடித்தது பா.ஜ.க. அரசு. மார்த்தாண்டம் – பார்வதிபுரம் மேம்பாலம் அமைக்க நமது மக்கள் பல ஆண்டுகாலமாக கேட்டுக் கொண்டே இருந்தனர். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு அது கேட்கவில்லை.

மீனவர்களுக்கு உதவி:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி முடிந்த பிறகுதான் அந்த வேலை முடிந்தது. நமது மக்கள் 40 ஆண்டுகாலமாக இரட்டை ரயில் பாதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பா.ஜ.க. அரசு வந்த பிறகுதான் இந்த வேலையும் விரைவில் செயல்படத் தொடங்கியது, விரைவில் இரட்டை ரயில் பாலமும் வந்துவிடும்.

தமிழ்நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் மும்முரமாக உள்ளோம். கடந்த மாதம் தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டினேன். நமது பகுதி மீனவர்கள் நன்மைக்காக, அவர்கள் நலனுக்காக பா.ஜ.க. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நவீன மீன்பிடி படகுகளுக்கு நிதி உதவி வழங்குவது, அவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு வரம்பிற்குள் கொண்டு வருவது என மீனவர்களின் நன்மைக்காக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ சமுதாயத்தின் நமது நண்பர் ஜாய்னி குரூஸ் ஆற்றிய பணிகளை நான் பாராட்டி நினைவுகூர்கிறேன்.

தி.மு.க. தமிழ் பண்பின் எதிரி:

தமிழ்நாட்டில் சாலைத் தொடர்பை மேம்படுத்தவும், ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் 10 ஆண்டுளில் 50 ஆயிரம் கோடி நெடுஞ்சாலை பணிகள் முடிந்துள்ளது. 70 ஆயிரம் கோடி பணிகள் நடைபெற்று வருகிறது. 2009 – 2014 காலகட்டத்தில் காங்கிரஸ் – தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே பணிக்காக ஒதுக்கிய திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு ரூபாய் 800 கோடி கூட இல்லை. ஆனால், பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய பணம் ஆண்டுக்கு 6 ஆயிரத்து 500 கோடி ஆகும்.

தி.மு.க. தமிழ்நாட்டின், தமிழ் பண்பின் எதிரி. சாதாரண எதிரியல்ல. கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி. ராமர் கோயில் திறப்புக்கு முன்பு நான் தமிழ்நாடு வந்தேன். பழமையான கோயிலுக்கும், புண்ணிய தலங்களுக்கும் சென்று பூஜை செய்தேன். ஆனால், தி.மு.க. அரசு என்ன செய்தது? அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேகத்தை பார்க்கக்கூட அவர்களுக்கு விருப்பம் இல்லை. அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை தமிழகத்தில் பார்ப்பவர்களுக்கு கூட  தடை விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்தளவு அவர்களுக்கு வெறுப்பு. உச்சநீதிமன்றமே அவர்களை கண்டிக்கும் நிலை இருந்தது.

வெறுப்பை கக்கும் தி.மு.க.

நமது கலாச்சாரத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் தி.மு.க. வெறுப்பை கக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அடையாளத்தை, பெருமையை பாதுகாக்க பா.ஜ.க. என்றும் முன்னிலையில் உள்ளது. அவர்கள் தூற்றல்களையும், பேச்சுக்களையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த தி.மு.க. – காங்கிரஸ் அரசு மவுனம் காக்கிறது. அவர்கள் நமது கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை அழிக்கப் நினைத்தார்கள்.

ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடு செய்தது நமது பா.ஜ.க. அரசு. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பெருமை. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டின் எந்தவொரு பெருமை மிக்க பாரம்பரியமிக்க விஷயமாக இருந்தாலும் மோடி இருக்கும் வரை அதை யாராலும் அசைக்க முடியாது."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - 2 மாணவர்கள் மரணம்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - 2 மாணவர்கள் மரணம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - 2 மாணவர்கள் மரணம்
Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - 2 மாணவர்கள் மரணம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
TVK Vijay: லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
ஒரு குடும்பத்தையே அடித்துக் கொன்ற கும்பல், 5 பேர் தீ வைத்து எரிப்பு - நம்ம ஊரில் இப்படியா? காரணம் என்ன?
Edappadi Palanisamy: “இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
“இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
Trump Vs Musk: “அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
“அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
Embed widget