மேலும் அறிய

Lok Sabha Elections 2024: ஜெயலலிதாவை சிறையில் வைத்த பாஜகவினரிடம் மண்டி இடுகிறார் டிடிவி - சீமான்

தமிழ் இனத்தை அழித்த கட்சியோடு கூட்டணி வைத்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன் -  உசிலம்பட்டியில் சீமான் பரபரப்புரை

உசிலம்பட்டியில் சீமான் பரபரப்புரை
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபால்-யை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய சீமான், "இங்கே சிலையாக உள்ள நமது தாத்தாக்களை உற்று நோக்குங்கள், தன்னலமற்று போராடியவர்களை பாருங்கள். இன்று நான் பேசுவதை அன்றே முத்துராமலிங்க தேவர் பேசினார். இன்று நீங்கள் பார்க்கும் அனைத்தையும், அன்றே கணித்து சொன்னவர் முத்துராமலிங்க தேவர். காற்றை விற்பான், தண்ணீரை விற்பான், என சொன்னார் நடக்கிறது. என் தாத்தா சொன்னதை போன்று இன்று அவர் பேரன் சொல்கிறேன். நான் சொல்வதும் அனைத்தும் நிச்சயம் நடக்கும்.
 
கட்சி மாறும் வேட்பாளர்கள்
 
வேலை இல்லை என்று சென்றவரை தேர்தலில் நிற்க வைத்து மூக்கையாத்தேவரை முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற வைத்தார். அதே போல வேட்பாளர் மதன் ஜெயபால் - யை ஜெயிக்க வைக்க வேண்டும். முத்துராமலிங்க தேவர் தமிழ்நாடு பார்வட் ப்ளாக் தலைவராக இருந்தார். மூக்கையாத்தேவர் அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் தலைவராக உயர்ந்தார். கச்சத்தீவை தாரை வார்க்கும் போது கடுமையாக குரல் கொடுத்தார். இன்று கச்சத்தீவை தாரை வார்க்க காரணமான கட்சியுடனும், நமது இனத்தை கொத்துக் கொத்தாக கொன்ற கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு இன்று தங்கதமிழ்ச்செல்வன் வாக்கு கேட்டு வருகிறார். பதவிக்காக எதையும் செய்யலாம் என டி.டி.வி தினகரன் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளார். நான்கரை ஆண்டுகள் ஜெயலலிதா வை சிறையில் வைத்தவர்கள் பா.ஜ.கவினர் அவர்களிடம் மண்டி இடுகிறார்., இந்த வெற்றியை வைத்து என்ன சாதிக்க போகிறீர்கள்., உங்கள் மீது உள்ள வழக்குகளை வேண்டுமானால் பார்த்துக் கொள்ள முடியும், எங்களை யார் பார்ப்பார்கள். அதிமுக எதற்கு அந்த கட்சி, இரட்டை இலையில் நின்றவர் குக்கரில் நிற்கிறார், இரட்டை இலையில் நின்றவர் உதயசூரியனில் நிற்கிறார்., இப்போது இரட்டை இலையில் நிற்பவர் அடுத்து எந்த கட்சிக்கு போவார் என தெரியாது, ஆனால் நாங்கள் மாறப்போவது இல்லை.
 
நம்பிக்கையுடன் வாக்களியுங்கள்
 
என் தாத்தா மூக்கையாத்தேவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போல மருத்துவர் மதன் ஜெயபால் - யை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள், எல்லாக் கட்சிகளும் கூட்டு சேர்ந்து கூட்டணியுடன் வருகின்றனர், நாங்கள் தனியாக, மக்களை நம்பி நிற்கிறோம். இரட்டை இலை இரட்டை இலை என ஓட்டு போடுறீங்களே எதுமே செய்யாத அதிமுக என்ற கட்சி இருந்தா என்ன செத்தா என்ன சொல்லுங்கப்பா. நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் உசிலம்பட்டியில் சட்டக்கல்லூரி மற்றும் மாயக்காள் பெயரில் மகளீர் கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படும்" என பேசிவிட்டு மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget