மேலும் அறிய
Advertisement
Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன் - சீமான்
Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் என்று தெருக்கோடியில் நின்றாலும் மக்களுக்காக போராடுவேன் - சீமான்
விழுப்புரம்: ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை என்றும் மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்கள் திமுகவினர், மாநில உரிமையை பறித்தவர் தான் மத்திய அரசு, வஞ்சிக்கப்படும் இனமாக தமிழ் இனம் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய சீமான், நாட்டினை நரேந்திர மோடி பத்தாண்டுகளும் மன்மோகன்சிங் பத்தாண்டுகளும் ஆட்சி செய்து எந்த மாற்றமும் நிகழவில்லை, வளரும் நாடுகளின் பட்டிலியலையே இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக பத்தாண்டுகளில் பயனுள்ள திட்டங்கள் இதுவரை கொண்டுவரவில்லை.
விவசாயிகள் இன்று வரை டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கேட்டு போராடி கொண்டிருக்கும் போதே தாக்குதல், துப்பாக்கி சூடு தான் நடைபெறுவதாக தெரிவித்தார். பதவி தான், பணம் தான் வேனும் என்றால் யாருடனாவது கூட்டணி வைத்து அமைச்சராகி இருப்பேன், பணம் பெற்று சென்றிருப்பேன் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் என்று தெருக்கோடியில் நின்றாலும் மக்களுக்காக போராடுவேன் என்று போராடி கொண்டிருப்பதாகவும், பாஜக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று கூறிவிட்டு இருவரும் செய்யவில்லை என்றும் பிரச்சனையை தீர்ப்பவன் தான் பிரதமராக இருக்க வேண்டும் என கூறினார்.
கர்நாடகாவில் தண்னீர் தரமாட்டோம் என்று கூறிய பின்பும் ஸ்டாலின் கூட்டணி கட்சிக்காக கர்நாடகாவிற்கு சென்று வருவதாகவும் ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்தவர்கள் குறித்து திமுக எதுவும் செய்யவில்லை கர்நாடகாவில் உற்பத்தி ஆகும் தண்ணீர் அவர்களுக்கென்றே காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இண்டியா கூட்டணி வைத்து நாட்டினை காப்பாத்துவோம் என ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்தார்.
மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்கள் திமுகவினர் மாநில உரிமையை பரித்தவர் தான் மத்திய அரசு என்றும் வஞ்சிக்கப்படும் இனமாக தமிழ் இனம் உள்ளதாகவும், வரியை சுருட்டி எடுத்து கொண்டு பேரிடர் காலங்களில் நிதியை வழங்குவதில்லை என சாடினார். இந்திய வருவாயை பெருக்குகிற மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆனால் அதனை வரியை திருப்பி அளிக்காமல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. மகாராஸ்டிராவில் மராட்டியத்தில் விளம்பரங்கள் இல்லை என்றால் இருமடங்கு வரி உயர்வு ஏற்றப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியில் கலப்பு மொழி கலந்துள்ளதால் தமிழை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடல் இருக்கிறது மீன் பிடிக்கும் உரிமை இல்லை மீன்பிடிக்கும்போது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகிறான். ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக காவல் துறை இல்லாமல் பணி செய்ய நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்பேற்கும் போது என்னால் செய்ய முடியும் என்றும் வெளங்காத திராவிட மாடல் ஆட்சியாக நினைக்கவேண்டாம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி சிறப்பாக இருக்கும் என கூறினார்.
அடிப்படை அரசியல் அமைப்பினை மாற்ற வேண்டும் ரெண்டு தொகுதிகளில் போட்டியிடுவதையும் எம் எல் ஏவாக இருந்து கொண்டு எம்பிக்கு போட்டியிடுவதை தடுக்க வேண்டும், அம்பானிக்கு வேலை செய்து தரகர் வேலையை மோடி செய்து கொண்டிருப்பதாகவும், பனம் பால் தென்னாம் பால் என்ற சொல்லை அறிமுகபடுத்தியவே நான் இன்று அண்ணாமலையும் மோடியும் பனம் பால் என்று தெரிவிப்பதாகவும், சாலைகள் அமைப்பதாக கூறி மரங்களை வெட்டுகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.
ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை, ஆயிரம் ரூபாய் பெறவேண்டிய நிலை இல்லை என்பதை உருவாக்குவது சாதனை என்றும் ஊழல் லஞ்சத்தை அழிக்க கோஷ்டிகளிடையே கூட்டணி வைக்காமல் அழிக்க போராடி கொண்டிருக்கிறோம் எனக்கு எனது தம்பிகளுக்கு ஓட்டு போடு போடாமல் போங்கள் ஆனால் ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் வாக்கென்னும் வலிமை மிக்க ஆயுதத்தினை எழுச்சிக்காக ஏந்த வேண்டும் என தெரிவித்தார்.
போராளிகளுக்கு ரத்த உறவினை விட லட்சிய உறவு மேலானது, கதையை எழுதி கொண்டிருந்த களஞ்சியத்தை விழுப்புரம் தொகுதியில் நிற்க வைத்துள்ளேன், காஞ்சிபுரத்தில் நிற்க வைக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அங்குள்ள மாவட்ட செயலாளர் என்னை நிறுத்த வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றான் திருவள்ளுவரீல் நிறுத்தலாம் என்று நினைத்தபோது ஆசிரியரைவேலையை உதரிவிட்டேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார் அதனால் விழுப்புரத்தில் களஞ்சியத்திற்கு வாய்ப்பளித்து போட்டியிட வைத்துள்ளதாக கூறினார்.
1976 ல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை 2024 ஆல் மீட்பேன் என்பதும் ஆயிரம் ரூபாய் மகளிர் தொகை குறித்து பேசுவது என்பது தேர்தல் அரசியல் என்றும் பதவி ஆசைக்காக எம் எல் ஏவாக இருந்தவர் எம் பியாக போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் இதில் தேர்தல் திணிக்கப்படுகிறது ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஐந்தாயிரம் முறை கூறுவது தேர்தல் அரசியல் நம்பகூடாதவனை நம்ப கூடாது நம்ப வேண்டியனை நம்பாமல் இருப்பது தான் தவறு. படமெடுத்தால் வருமானம் தேர்தலில் இனமானத்தை மீட்க வேண்டுமென்று களஞ்சியத்தை வேட்பாளராக நிற்க கூறினேன் களஞ்சியம் வந்துவிட்டார். மாறுவோம் மாற்றம் கொண்டுவர மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென பிரச்சாரத்தில் சீமான் பாடல் பாடினார்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion