Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தல் - கொ.ம.தே.க. கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: தி.மு.க. கூட்டணியில் உள்ள கொ.ம.தே.க. கட்சியின் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கொ.ம.தே.க. கட்சி வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த தொகுதியில் சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சூரியமூர்த்தி, 10 ஆண்டுகள் கொ.ம.தே.க. கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்தவர். 2001 , 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். 2006-ல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.
பொதுத் தேர்தல் 2024
நாடாளுமன்ற மக்களவையின் பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகியுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, பஞ்சாப் , குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க. கூட்டணி
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்.), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைக் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்டவை I.N.D.I.A. என்று பெயரில் தேர்தலை சந்திக்கின்றன.
ம.தி.மு.க. கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கலில் கொ.ம.தே.க. கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளான மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வராஜும் போட்டியிடுகின்றனர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதியிலும், ம.தி.மு.க. 1 தொகுதியிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
மேலும் வாசிக்க..
DMK Candidate List: அதிரடி மாற்றங்கள்.. திமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான்!