மேலும் அறிய

Election Results 2024: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்..! பல முக்கிய தகவல்கள்!

Lok Sabha Election Results 2024: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ள நிலையில் முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவானது  ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கையானது, இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல்:   

இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலானது, மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியின் பாஜக வேட்பாளர் போட்டியின்றி களம் கண்டதால், அவரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் 542 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை  இன்று ( ஜூன் 4 ஆம் தேதி ) எண்ணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தெரிவிக்கும். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பாக நடைபெறும் வகையில், பலகட்ட பாதுகாப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

7 கட்ட தேர்தல் வாக்கு சதவிகிதம்:

7 கட்டமாக நடைபெற்ற தேர்தலில்,  முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகளும், 3-ம் கட்ட தேர்தலில், 65.68 சதவிகித வாக்குகளும், 4-ம் கட்ட தேர்தலில், 69.16 சதவிகித வாக்குகளும், 5-ம் கட்ட தேர்தலில், 62.2 சதவிகித வாக்குகளும், 6-ம் கட்ட தேர்தலில், 61.98 சதவிகித வாக்குகளும் 7-வது கட்ட தேர்தலில் 62.36 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Election Results 2024: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்..! பல முக்கிய தகவல்கள்!

வாக்கு எண்ணிக்கை எப்போது?:

தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையானது, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படவுள்ளது. ஆனால் இம்முறை, எண்ணப்பட்ட தபால் வாக்குககளின் முடிவுகள் முதலில் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும், கடைசி கட்ட மின்னணு வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே தபால் வாக்குகள் முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றி யாருக்கு?

Election Results 2024: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! முதலில் தெரிவிக்கப்படாத தபால் வாக்குகள்..! பல முக்கிய தகவல்கள்!

மக்களவைக்காக நடைபெற்று வரும் தேர்தலில் தேசிய அளவில் முக்கியமாக 2 கூட்டணிகள் தலைமையிலான கூட்டணி இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. ABP நிறுவனமும் C voter உடன் இணைந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தது. கருத்து கணிப்புகள் முடிவில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று, உண்மையான தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.  தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தொடருமா அல்லது, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது பெரும்பாலும் இன்று மதியத்திற்குள்ளோ அல்லது இன்று மாலைக்குள்ளோ தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ABP தொடர் நேரலை:

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தான தகவலை ஏபிபி நாடு வலைதள பக்கத்தில் தொடர் நேரலையாக பார்க்கலாம்.

  • https://tamil.abplive.com/ என்ற இணையத்தள பக்கத்தின் மூலம் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
  • https://www.youtube.com/@abpnadu என்ற யூடியூப் பக்கத்தின் வாயிலாகவும் மக்களவை தேர்தல் முடிவுகளை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
  • https://www.facebook.com/abpnadu என்ற முகநூல் பக்கத்தின் வாயிலாகவும், https://x.com/abpnadu என்ற எக்ஸ் பக்கத்தின் மூலமும் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள். 
  • https://www.instagram.com/abpnadu/ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எங்களை தொடர்ந்து பாலோ செய்து 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள். 

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget