Voter ID : வோட்டர் ஐடி இல்லையா கவலைப்படாதீங்க..! இந்த 11 ஐடி-ல ஏதாச்சு ஒன்னு போதும்..!
Lok Sabha Election 2024: வாக்காளர் அடையாள அட்டையே இல்லாவிட்டாலும், தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம்.
![Voter ID : வோட்டர் ஐடி இல்லையா கவலைப்படாதீங்க..! இந்த 11 ஐடி-ல ஏதாச்சு ஒன்னு போதும்..! Lok Sabha Election 2024 without Voter ID you can use 11 alternative documents to cast your vote Voter ID : வோட்டர் ஐடி இல்லையா கவலைப்படாதீங்க..! இந்த 11 ஐடி-ல ஏதாச்சு ஒன்னு போதும்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/17/45b51ae7666194a261670e186200c4ae1713319102741732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lok Sabha Election 2024: தகுதியான நபர்கள் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தலாம் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட, நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பது என்பது, ஒவ்வொரு தகுதியான வாக்களரின் அடிப்படை கடமையாகும். அப்படி வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) பிரதான ஆவணமாக கருதப்படுகிறது. இது, வாக்காளர்களின் வசிக்கும் இடம், பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாக உள்ளது.
வோட்டர் ஐடி இல்லாமல் வாக்களிக்கலாமா?
தேர்தல் ஆணையத்தின்படி வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாளம் அவசியம். அதன்படி, வாக்களிக்க, தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்தை நீங்கள் வழங்க வேண்டும். அதேநேரம், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கலாம். அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும் வரை நீங்கள் வாக்களிக்கலாம். வாக்களிப்பதற்கு முன், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்க வேண்டும். நீங்கள் வாக்களிப்பதற்கு முன் இந்தப் பட்டியலைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதில் உங்கள் பெயர் இருப்பது வாக்களிப்பதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்துகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களை வாக்காளர் பயன்படுத்தலாம்.
வோட்டர் ஐடிக்கான மாற்று ஆவணங்கள்:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அடையாளத்தை உறுதி செய்ய வோட்டர் ஐடி மற்றும் அதற்கு மாற்றாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆவணங்களில் எதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
- ஆதார் அட்டை
- MNREGA வேலை அட்டை (100 நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை)
- வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்,
- தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
- ஓட்டுனர் உரிமம்
- பான் கார்டு
- NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு
- இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
- எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
- தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UDID) அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அடையாள அட்டை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)