மேலும் அறிய

DMK - VCK Alliance: 3 தொகுதி கேட்டு கறார் காட்டும் விசிக - இறங்கி வருமா திமுக? - இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை

DMK - VCK Alliance: திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீட்டிற்கான இரண்டாம் கட்ட பேச்சுவர்த்தை இன்று நடைபெறுகிறது.

DMK - VCK Alliance: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களவை தொகுதியில் தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:

நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான பணிகளை கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என்பது போன்ற பணிகள் பல்வேறு கட்சிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

தமிழக அரசியல் கூட்டணி:

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் திமுக கட்சியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக தனது கூட்டணியில் சேர்க்க பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுமுனையில் பாஜகவும் தனி கூட்டணியை உருவாக்கி வருகிறது. அதில் தற்போது வரை தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் திமுக:

கடந்த ஜனவரி மாதம் முதலே கூட்டணி கட்சிகளுடன் திமுக, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோருக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இதுவரை இறுதியாகவில்லை.  

3 தொகுதிகளை கேட்கும் விசிக:

தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கடந்த தேர்தலில் 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்தலில் தங்களுக்கு 2 தனி மற்றும் ஒரு பொதுத்தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது விசிக வலியுறுத்தியுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற தங்கள் கட்சி மாநாட்டின் பிரமாண்ட வெற்றியை காட்டி, இந்தமுறை தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், திமுக தரப்பில் இரண்டு தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு கட்சிகள் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில் சுமூக் முடிவு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ், மதிமுக:

அதேநேரம், காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை, கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மதிமுகவிற்கோ ஒரு மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் எனவும், கடந்த முறை போல மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக கூறுவதாக தெரிகிறது. இதனால் இந்த கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடும் இன்னும் இழுபறியாகவே உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget