மேலும் அறிய

Lok Sabha Election 2024: திருவண்ணாமலை வேட்பாளர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய கட்டுப்பாடுகள் என்ன ?

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திருவண்ணாமலை வேட்பாளர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மற்றும்  ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 20.03.2024 முதல் 27.03.2024 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை ஆன்லைனில்  பதிவு செய்திடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதளம் http://suvidha.eci.gov.in ஆகும். ஆனால் வேட்பு மனுவிற்கான கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் சான்றுதியாவணம் (Affidavit) பதிவேற்றம் செய்யும் வசதியும், ஆன்லைனில் வைப்புத் தொகை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் வேட்புமனுவினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய ஆவணங்களுடன் நேரில் வேட்பாளரோ வேட்புமனுவினை முன்மொழிபவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்  நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். அம்மனுலில் வேட்புமனு தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே வேட்பு மனுவினை சமாப்பிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே ஆகும். காலை 11:00 மணிக்கு முன்னரும் மாலை 3.00 மணிக்கு பின்னரும் வரப்பெறும் வேட்புமனுக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Lok Sabha Election 2024:  திருவண்ணாமலை வேட்பாளர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய கட்டுப்பாடுகள் என்ன ?

வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுபோது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியவாறு பின்பற்றப்படவேண்டும்

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், திருவணணாமலை அவர்களிடமும், மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், திருவண்ணாமலை அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளிக்கலாம். ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடமும்,மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளித்திடலாம். மேலும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்திடும்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியவாறு கீழ்க்கண்ட நடைமுறைகளை கணடிப்பாக பின்பற்றப்படவேண்டும் எனவும் திருவண்ணாமலை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவிக்கின்றார்.

Lok Sabha Election 2024:  திருவண்ணாமலை வேட்பாளர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய கட்டுப்பாடுகள் என்ன ?

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முந்தைய நாளிலிருந்து மட்டுமே தேர்தல் செலவினத்திற்காக புதியதாக வங்கிக் கணக்கிளை தொடங்கவேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதியதாக வங்கிக் கணக்கு தொடங்கலாம். வங்கிக் கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது தேர்தல் முகவர் ஆகியோர் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்கலாம். வேட்பாளர் அவரது குடும்ப உறுப்பினர்களை கூட்டாக கொண்டு வங்கிக் கணக்கு தொடங்கக் கூடாது. மேற்படி,வங்கிக் கணக்கு விவரத்தினை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தரவேண்டும். வேட்பு மனுவுடன் வேட்பாளர் சம்மந்தப்பட்ட Form 26 Affidavit ஒன்றினை நோட்டரி பப்ளிக் சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாதுகாப்பு வைப்புத் தொகை (Security Deposit) ரூ.25000 ரொக்கமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும்.

Lok Sabha Election 2024:  திருவண்ணாமலை வேட்பாளர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய கட்டுப்பாடுகள் என்ன ?

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பழங்குடியினர் எனில் அசல் சாதிச் சான்றினை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்

நிகழ்நிலையில் வேட்பு மனு அளித்தால் நிகழ்நிலையிலேயே வைப்புத் தொகையினை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காசோலை வரைவோலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்  பழங்குடியினருக்கான வேட்பு மனு தாக்கல் பாதுகாப்பு வைப்பு தொகை (Security Deposit) ரூ.12500 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பழங்குடியினர் எனில் அசல் சாதிச் சான்றினை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன 4 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வரவேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சார வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே அனுமதி பெறவேண்டும் 6T60T மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget