மேலும் அறிய

தினகரனையும், ஓபிஎஸ்சையும் காரசாரமாக விமர்சித்த தங்கச் தமிழ்செல்வன் - எதற்காக தெரியுமா?

தேனி மக்களவை தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி.

டிடிவி தினகரனுக்கு "பேஸ்" இல்லை தங்கதமிழ்செல்வன் தாக்கு:

தேனி மாவட்டம்  லட்சுமிபுரம் பகுதியில்  திமுக வேட்பாளரும், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரனுக்கு "பேஸ்" இல்லை. சமூக வலைதளம் ஊடகம் பத்திரிகைகளை விலைக்கு வாங்கி மாயத்தோற்றத்தை மக்களிடம் காட்டுகிறார். அது எடுபடாது. தேனியில் டிடிவி தினகரன் எனக்கு போட்டியே இல்லை. திமுக, அதிமுக என்ற இருமுனை போட்டி தான். ஏன் சொல்கிறேன் என்றால், ஜெயலலிதா காலமானபோது ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர். விட்டிருந்தால் அதிமுக ஐந்தாண்டுகள் ஆட்சியை நன்றாகத்தான் நடத்தியிருப்பார்கள்.

தினகரனையும், ஓபிஎஸ்சையும் காரசாரமாக விமர்சித்த தங்கச் தமிழ்செல்வன் -  எதற்காக தெரியுமா?

ஓபிஎஸ்சை அடித்து ராஜினாமா செய்யவைத்தனர்:

ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து அடித்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது டிடிவி தினகரன். இதை நான் சொல்லவில்லை ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம நடத்தும்போது ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினார். "என்னை அடித்து தான் ராஜினாமா கடிதத்தை வாங்கினார்கள். தினகரனும், சசிகலாவும் இணைந்த கூட்டம், ஜெயலலிதாவை கொன்ற கூட்டம் என்று ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார். அதற்குப்பின், தினகரன் சின்னம்மா சசிகலாவை முதல்வராக்க நினைத்தார். பாஜக தான் சசிகலாவை சிறையில் தள்ளியது.

Lok Sabha Election 2024: போடி சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்களுக்கு ரோஷம் வேண்டும் -  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன்  ஆவேசம்

டிடிவி அந்தர்பல்டி அடிக்கிறார்:

இரட்டை இலை வழக்கில் தினகரனை திகார் ஜெயிலில் அடைத்தது பாஜகவின் மோடி அரசு. அப்போதெலாம் வீர வசனம் பேசிய தினகரன், பாஜக ஒரு காலத்திலும் தமிழகத்தில் ஜெயிக்காது. மூன்றாவது முறை மோடி பிரதமாக முடியாது என்று சொன்ன தினகரன், இன்று "அந்தர்பல்டி" அடித்து அவர்கள் காலில் விழுந்து ஒரு சீட் வாங்கி போட்டியிடுகிறார். "பேஸ்" உள்ள அதிமுக சார்பில் 2004 ல் பெரியகுளம் மக்களவையில் போட்டியிடுகிறார். பலமான கூட்டணி. ஜெயலலிதா உயிரோடு உள்ளார். அமைச்சர்கள் பணம கொடுக்கிறார்கள், அப்பவே 28 ஆயிரம் வாக்குகளில் தோல்வியுறுகிறார். இப்போது எந்த "பேஸ்" மே இல்லாமல், திமுக வலுவான கூட்டணி, திமுக அரசின் ஸ்டாலினின் செய்த சாதனைகள் ஏராளம்.

Lok Sabha Election 2024: டிடிவியும், ஓபிஎஸ்ஸும் ஒரே சின்னத்தில் நின்றிருக்க வேண்டும் - தங்க தமிழ்செல்வன்

ஜெயலலிதாவை கொன்றதே தினகரனும் சசிகலாவும் தான்

நான் உள்ளுர்க்காரன். பெரிய கூட்டணியில் உள்ளேன். உள்ளூரில் தங்கி அரசியல் செய்பவன். எனக்கென்று ஒரு தனிக் கூட்டம் உள்ளது. அதனடிப்படையில மாபெரும் வெற்றியை தேனி மக்கள் எங்களுக்கு அளிப்பார்கள். ஜெயலலிதாவை கொன்றதே தினகரனும் சசிகலாவும் தான் என்று ஓ.பன்னீர் செல்வம் சொன்னார். இப்போது மட்டும் ஜெயலலிதாவை எப்படி பெரிதாக பேசுகிறீர்கள்? ஜெயலலிதா உங்களை (டிடிவி தினகரனை) கட்சியை விட்டு நீக்கியதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே முதல்வராக நினைத்ததால் தான் தினகரனையும் சசிகலாவையும் 10 ஆண்டுகள் கட்சியை விட்டே நீக்கி வைத்திருந்தார்கள். நான் சொல்லவில்லை. அண்ணன் ஓ.பன்னீர் செல்வம்தான் தெருத்தெருவாக சொன்னார்.

தினகரனையும், ஓபிஎஸ்சையும் காரசாரமாக விமர்சித்த தங்கச் தமிழ்செல்வன் -  எதற்காக தெரியுமா?

உள்ளூர்காரன் பெருசா? வெளியூர்காரன் பெருசா?

உண்மைதானே. இப்போது மட்டும் ஜெயலலிதா மீது பாசம் எப்படி வருகிறது? கிராமங்களில் மக்கள் இதையும் யோசிப்பார்கள். எப்படி ஏற்றுக் கொள்வார்கள்," என்றார் தங்க தமிழ்ச்செல்வன். " எனக்கு நான் மட்டும் பரப்புரை மேற்கொள்கிறேன். நான் நம்புவது எனது கட்சியினர், எனது கூட்டணி கட்சியினர், மக்களை. அவர்கள் நம்புவது வெளியூர்காரர்களை. அவர்கள் குடும்பத்தை உள்ளூர்காரன் பெருசா வெளியூர்காரன் பெருசா என தேனி மக்களவை தொகுதி மக்கள் சரியா தீர்ப்பை வழங்குவார்கள், " என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Embed widget