Lok Sabha Election 2024:மக்களவைத் தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலின் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
![Lok Sabha Election 2024:மக்களவைத் தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்! Lok Sabha Election 2024 The work of affixing symbols on electronic voting machines began Today Lok Sabha Election 2024:மக்களவைத் தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/a609a5cf29ff0b0ad47a67d9f13d77171712730757992333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல்
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சென்னையில் சென்னை வடக்கு, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வரும் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் பணி தீவிரம்
அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று (10.04.2024) தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் 41 வேட்பாளர்கள்,வடசென்னையில் 35 வேட்பாளர்கள், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள போட்டியிடுகின்றனர்
வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து மத்திய சென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஒவ்வொன்றிற்கும் 2 இயந்திரங்களும் வடசென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஒவ்வொன்றிற்கும் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் பொருத்தக்கூடிய வாக்காளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்றது. இன்று (10.04.2024) வேட்பாளர்களின் முன்னிலையில், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைகக்ப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)