Sivakarthikeyan: "புல்லட்டை விட வலிமையானது பேலட்” - வாக்களிக்க வருமாறு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதல் மக்கள் விறுவிறுப்பாக வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் இந்த நாளை திருவிழாவாக கொண்டாடுங்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதல் மக்கள் விறுவிறுப்பாக வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் காலையிலேயே வந்து தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் வந்து வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்து விட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
Actor #Sivakarthikeyan casts his vote!#LokSabhaElections2024 #Elections2024 #Election2024 https://t.co/hK1tOrFTxI pic.twitter.com/UCPEAuB7tB
— Anandh Sellappa (@sparkanandh) April 19, 2024
அப்போது, “எல்லாரும் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் இந்த நாளை திருவிழாவாக கொண்டாடுங்கள். அதனால் எல்லாரும் வாக்களியுங்கள். இன்னைக்கு விடுமுறையாக இருந்தாலும் ஒரு கால் மணி நேரம் முதல் அரைமணி நேரம் வரை வாக்களிக்கும் வேலையை செய்து விட்டு இந்த விடுமுறை நாளை கொண்டாடுங்கள். எல்லாத்தையும் விட வாக்களிப்பது முக்கியம். நான் பண்ணேன், மத்தவங்க பண்னேன் என செய்யக்கூடாது. இது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை. முதல்முறை வாக்காளர்கள் வந்து பார்த்தால் தான் தெரியும். எவ்வளவு பேர் பணியில் இருக்கிறார்கள். எதற்காக இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். இந்த அரசு அதிகாரிகள், போலீஸ் எல்லாரும் வேலை பார்க்கிறார்கள். அதற்காகவாது வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சரியாக செய்யுங்கள்” என சிவகார்த்திகேயன் கூறினார்.
இதேபோல் நடிகர் பிரபு குடும்பத்துடன் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்திய குடிமகன் என்பதை மனதில் வைத்துக் கொண்டு எல்லாரும் வந்து வாக்களியுங்கள். உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள். இந்த தேர்தல் நல்ல முறையில் செல்லும் என நம்புகிறேன். அதற்கு நம்முடைய ஒத்துழைப்பும் தேவை. இன்றைக்கு விடுமுறை என வீட்டில் உட்காராமல் மாலை 6 மணி வரை நேரம் இருக்கு. எல்லாரும் வாக்களியுங்கள்” என தெரிவித்துள்ளார்.