(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: நம்பி வந்த சிம்லாமுத்துசோழனை நட்டாற்றில் விட்டாரா இ.பி.எஸ்? பின்னணி என்ன?
நெல்லை தொகுதியில் வெற்றி பெற்று விடுவேன் உறுதியுடன் இருந்த சிம்லா முத்து சோழன், தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சற்குணபாண்டியனின் இரண்டாவது மருமகள்தான் இந்த சிம்லா முத்து சோழன். (தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரின் அரசியல் வாரிசாக இருந்த சிம்லா முத்து சோழன் தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வந்தார்.
கழட்டிவிடப்படுகிறாரா சிம்லா முத்து சோழன்?
இந்த சூழலில் கடந்த 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை, கட்சியிலும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, திமுக கட்சியில் இருந்து தன்னை தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த சிம்லா முத்து சோழன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இவர் அதிமுகவில் இணைவதற்கு முன்பே திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக இவரது சார்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை தொகுதியில் வெற்றி பெற்று விடுவேன் உறுதியுடன் இருந்த சிம்லா முத்து சோழன், தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்தான், அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, வருகின்ற மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கைகோர்த்தது. இதையடுத்து, நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் அதிமுகவினர் இடையே போட்டியிடுவதன் ஆர்வமும் குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த முறை கூட்டணி விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக செயல்படவில்லை என்றும், அதே சமயம் மாவட்ட செயலாளர்களை நிற்க வேண்டுமென கேட்டுகொண்டார். பல மாவட்ட செயலாளர்கள் பின் வாங்கி தாங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என எஸ்கேப் ஆக்கி விட்டனர் என்றும்,
தேர்தல் செலவு செய்ய கூடிய ஆட்களாக பார்த்தே நிறுத்தபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி தொகுதியில் சிம்லா முத்து சோழன் கடும் மழை வெள்ளம் போதே நேரடியாக சென்று மக்கள் பணியாற்றினார்.
சிம்லா முத்து சோழனுக்கு பதிலாக வேறு வேட்பாளரா?
தற்போது சிம்லா முத்து சோழனுக்கு பதிலாக திசையின்விளை சேர்மன் ஜான்சி ராணி நிறுத்தப்படுவார் என்றும் இதற்கு பின்னணியில் மாவட்ட செயலாளரும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இருப்பதாக அதிமுகவினர் பரபரப்பாக பேசி வருகின்றனர். வேட்பாளர் பட்டியிலில் சிம்லா முத்து சோழன் பெயர் அறிவிக்கபட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சிம்லா, அம்மாவை எதிர்த்து நின்றவர் அவருக்கு எப்படி பின் நின்று வாக்கு கேட்பேன் என சப்பை காரணம் சொல்வதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி திமுக வேட்பாளர் வெற்றிக்கு ஏதுவாக இருக்கும் வகையில் ஜான்சி ராணிக்கு வாய்ப்பு வழங்க படவேண்டும் எனவும், அதற்கு அதிகம் மெனக்கெடுவதாக பின்னணியில் பணம் விளையாடபட்டதாக கூறப்படுகிறது. அதோடு பெரும் நிறுவனத்தின் அதிபர் வேட்பாளர் மாற்றத்திற்கு ஆதரவு தருவதாக தகவல் கசிகிறது. பாரம்பரிய திமுக குடும்பதிலிருந்து, எடப்பாடி பழனிச்சாமி நம்பி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்து சோழன், தற்போது வெளியாகி வரும் செய்திகளால் விரக்தியில் உள்ளதாக தெரிகிறது. கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரை சின்னசின்ன காரணங்களை காட்டி வேட்பாளர் மாற்றம் செய்வதில் பணம் விளையாடி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ இந்த தேர்தலில் கூட்டணி விஷயத்திலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதிக்கம் இல்லை என்பது தெரிந்த கதை என்றாலும் வேட்பாளர் உறுதியாக நிறுத்துவதில் கூட ஆதிக்கம் இல்லை என்றே தெரிகிறது. நாளை திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக ஜான்சி ராணி பெயர் வரும் என்றும் கூறப்படுகிறது.