மேலும் அறிய

Premalatha Vijayakanth: நான்கெழுத்து, 4 ஆம் நம்பர் என இந்த கூட்டணி இராசியான மகத்தான கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

திமுக அதிகார பலம், ஆட்சி பலத்தில் தேர்தலை சந்திக்கிறது. நாங்கள் மக்கள் பலத்தை நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கேப்டனுக்கு ரொம்ப பிடித்தது திருநெல்வேலி அல்வாதான். திருநெல்வேலிக்கு முதன்முறையாக கேப்டன் இல்லாமல் வந்திருப்பது என்னை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கேப்டன் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றிணைந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஜாதி, மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு தங்கள் வீட்டில் ஒருவராக கேப்டனை நினைத்து கண்ணீர் வடித்தீர்கள். எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வந்தவுடன் நெல்லை தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு வாக்குறுதியாக தாமிரபரணி  நதியினை சுத்தப்படுத்தி மாசு இல்லாத  நதியாக மாற்றப்படும். திருநெல்வேலி என்றாலே தாமிரபரணி தான். அந்த ஆறு சுத்தப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆற்றில் தண்ணீர் இல்லை. தடுப்பணை கட்ட மறுக்கிறார்கள். 

எந்த ஆட்சியாளர்களும் தொலைநோக்கு பார்வையில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்களுக்காக எங்களுடைய வேட்பாளர் கண்டிப்பாக உழைப்பார். மாநிலத்தில் ஆழம் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் மக்களுக்கான திட்டங்களை எதையும் செய்யவில்லை. திமுகவில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலில் நிறைவேற்றாமல் இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் சொல்லி வருகிறார். முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என தெரிவித்தார். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கொடுப்பதாக சொல்லிவிட்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கொடுப்பதாக அறிவித்தார்கள். மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை லஞ்சம் ஊழல் இல்லாமல் முழுமையாக மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி புரட்சிக் கலைஞர் என மூன்று பேரும் திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த  பல்வேறு திட்டங்களை செய்துள்ளார்கள். ஒட்டுமொத்த மக்களே இந்த கூட்டணியை கொண்டாடுகிறார்கள். மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் போற்றும் கூட்டணியாக இது அமைந்துள்ளது.

2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைய இந்த கூட்டணியை மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்க வேண்டும். இந்த கூட்டணி இராசியான கூட்டணி. அதிமுக நான்கு எழுத்து, தேமுதிக நான்கு எழுத்து, எஸ்டிபிஐ நான்கு எழுத்து என நான்கு கட்சிகள் சேர்ந்து மகத்தான கூட்டணி அமைத்துள்ளது. நான்காம் நம்பரில் உள்ள வேட்பாளர் ஜான்சிராணிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அதே போல தேர்தல் முடிவு வரப்போவது ஜூன் 4. உலகமே வியக்கும் வகையில் மகத்தான வெற்றியை ஜான்சிராணி பெறுவார்கள். பெண் வேட்பாளருக்கு ஒட்டுமொத்த தாய் குலமும் ஆதரவு தெரிவித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் காலத்திற்கு இந்த தேர்தலை பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும். திமுக அதிகார பலம் ஆட்சி பலத்தில் தேர்தலை சந்திக்கிறது. நாங்கள் மக்கள் பலத்தை நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறோம்” என அவர் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget