மேலும் அறிய

விவசாய மண் மீது சத்தியம் செய்து விவசாயிகள் குறைகளை தீர்ப்பேன் - பாமக வேட்பாளர் திலக பாமா

மோடி அவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறள் சொல்லி பேசுகிறார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் பீருக்கு பீர் என தமிழில் பெயர் வைத்து உள்ளார் .

விவசாய பெண்மணியாக மாறி விவசாயம் செய்த பெண் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்தும், பூச்சி கொல்லி மருந்து அடித்தும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர்.திலகபாமா  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். பிரச்சாரத்தில் புது புது வியூகங்கள் அமைத்து தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகளுடன்  இணைந்து பணி செய்தும்  வாக்குகள் சேகரித்து வருகிறார். 

விவசாய மண் மீது சத்தியம் செய்து விவசாயிகள் குறைகளை தீர்ப்பேன் -  பாமக வேட்பாளர் திலக பாமா

களை எடுத்து,  மருந்து தெளித்து.

இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புது அத்திக் கோம்பை பகுதியில் பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு உள்ள விவசாய விளை நிலங்களில் விவசாயிகள் பணி செய்து வந்தனர். அப்போது பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா பெண் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்தும், பூச்சிகொல்லி மருந்து அடித்தும் விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான எனக்கு விவசாயிகளுடன் துயர் துடைக்க விவசாயிகளின் சின்னமான மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விவசாய மண் மீது சத்தியம் செய்து விவசாயிகள் குறைகளை தீர்ப்பேன் -  பாமக வேட்பாளர் திலக பாமா

விவசாய மண் மீது சத்தியம்

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திலகபாமா பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் கல்லுப்பட்டியில் இருந்த ஒரு தோட்டத்தில் பெண்கள் தோட்ட வேலை செய்வதை பார்த்து காரை விட்டு இறங்கி தோட்டத்திற்குள் சென்று விவசாய பெண்களுடன் கலந்துரையாடினர். அப்போது விவசாயிகளுக்கு உரிய கூலி கிடைப்பதில்லை எங்களுக்கு உரிய கூலித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது, மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக விவசாயம் மண்ணை எடுத்து பெண்கள் கையில் வைத்து சத்தியம் செய்தார் அப்போது விவசாயிகள் கண்டிப்பாக ஓட்டு போட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்கிறோம் என உறுதி செய்தனர்.

விவசாய மண் மீது சத்தியம் செய்து விவசாயிகள் குறைகளை தீர்ப்பேன் -  பாமக வேட்பாளர் திலக பாமா

 குற்றச்சாட்டு 

மேலும் அவர் பொதுமக்களிடம் பேசுகையில், "எங்கள் கூட்டணிக்கு பிரதமர் மோடி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டோம். ஆனால் அருவாள் சுத்தியல் நட்சத்திரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எங்களின் பிரதமர் யார் என்று கூற முடியுமா அப்படி சொன்னால் 26 கட்சி கூட்டணிகள் பிரிந்து ஓடிவிடும். அப்போது நாம் யோசிக்க வேண்டும் யார் எதுக்காக நாம் ஓட்டு போட வேண்டும் என்று பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க தெரியாது. உடனே இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வருவார்கள் தகதகன்னு மின்னுகிற எம்ஜிஆர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம் இரட்டை இலை என்று சொன்னவுடன் நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் தான் நினைக்கிறீர்கள் எம்ஜிஆர் இல்லை ஜெயலலிதா அம்மாவும் இல்ல அவங்க கூப்பிட்டு வர்றது ஒரு நம்பியாரை கூட்டிக் கொண்டு வருகிறார்கள் மறந்து போய் கூட அதுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்.

விவசாய மண் மீது சத்தியம் செய்து விவசாயிகள் குறைகளை தீர்ப்பேன் -  பாமக வேட்பாளர் திலக பாமா

இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் எப்படி நிறுத்துகிறார் என்று உங்களுக்கு தெரியுமா?. மோடி அவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறள் சொல்லி பேசுகிறார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் பீருக்கு பீர் என தமிழில் பெயர் வைத்து உள்ளார் . குழந்தைகள் கல்வி கற்க தெரு தெருவிற்கு பள்ளிக்கூடங்கள் அமையுங்கள் என்று சொன்னால் சாராய கடையை தான் திறந்து வைத்துள்ளார் . அருவாள் சுற்றியல் நட்சத்திரத்திற்கும் இரட்டை இலைக்கும் வாக்களித்தால் மது கடை ஒழியாது  மாம்பழம்  சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் மதுக்கடை மூட நான் உங்களோடு இருந்து போராடுவேன்" என்று பேசினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget