மேலும் அறிய

Lok Sabha Election 2024: திமுக, பாஜக, பாமகவை தாக்கி பேச்சு... தருமபுரியில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரம்

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் கச்சத்தீவு பற்றி பேசாத பாஜக, தேர்தல் வந்ததும் கச்சத்தீவு பற்றி பேசுகிறது - தருமபுரியில் சீமான் பேச்சு.

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அபிநயாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள வாரியார் திடல் அருகே வேனில் பிரச்சாரம் செய்தார்.
 
இந்த  பிரச்சாரத்தின் போது பேசிய சீமான், “முதன் முதலில் தமிழன் பேசிய மொழி தமிழ் என ஆய்வு சொல்கிறது. தமிழர்கள் என்ற உணர்வை இழந்ததால், உரிமைகள், உடைமைகளை இழந்து நிற்கிறோம். நில் பகைவர் சூழ தமிழ் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரசியல் வலிமை இருந்ததால் தான், அதிகார வலிமை பெறமுடியும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நம் கண் முன்னே இயற்கை வளங்கள், அண்டை மாநிலங்களுக்கு கொள்ளையடிக்கப்படுகிறது. ஒரு அடிப்படை புரிதல் இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளோம். இந்த மாற்றத்திற்கான அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். நாங்கள் நீண்ட காலமாக தேர்தலில் தனியாக போட்டியிடுகிறோம். ஆணுக்கு, பெண் சமம் என்று சொல்கிறார். ஆனால் நாங்கள் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்கிறோம். சமூக நீதி பேசுகிறார்கள். இதே தருமபுரியில் மு.க.ஸ்டாலின் பேசும் போது, சமூக நீதி பேசும் ராமதாஸ், பாஜகவோடு கூட்டணி வைக்கும் போது தெரியவில்லையா?.

Lok Sabha Election 2024: திமுக, பாஜக, பாமகவை தாக்கி பேச்சு... தருமபுரியில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரம்
 
அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. பெரியார் பூமி என்று சொல்கிறார்கள். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எந்தெந்த சமூகம், எவ்வளவு இருக்கு என்று சொல்வதற்கு திமுக ஏன் தயங்குகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு கொடுங்கள். ஆனால் மத்திய அரசு தான் அதை நடந்த வேண்டும் என மாநில அரசு சொல்கிறது. ஆனால் பிகார் அரசு இதை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் கொடுக்க மறுக்கிறது கர்நாடக, அந்த காங்கிரஸ் ஆட்சி அமைய உழைத்தவர் மு.க.ஸ்டாலின். இன்று நம்மை தேடி வாக்கு சேகரிக்க வரும் காங்கிரஸ் கட்சியினரின் நிலைப்பாடு என்ன? பாஜக நதிநீர் பிரச்சினை தீர்க்கவில்லை.‌ இப்போது கச்சத்தீவை பற்றி பேசுகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, இதைப்பற்றி பேசவில்லை. இப்போது தேர்தல் வருவதால், பாஜக கச்சத்தீவு பற்றி பேசுகிறது. சிலிண்டர் விலையை குறைக்கிறார்கள். ஆசிரியர்கள் போராடியபோது கண்டு கொள்ளாத முதலமைச்சர், இப்பொழுது தேர்தல் வருவதால், ஆசிரியர்‌களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்கிறார் ஸ்டாலின். தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என அச்சமடைந்து, அறிவித்துள்ளார்.

Lok Sabha Election 2024: திமுக, பாஜக, பாமகவை தாக்கி பேச்சு... தருமபுரியில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரம்
 
நாடாளுமன்ற தொகுதிகளை 6 சட்டமன்ற தொகுதியாக இருப்பதை மாற்றி, 3 தொகுதிகளை ஒரு நாடாளுமன்ற தேர்தலை உருவாக்கினால், அதிக தொகுதிகள் இருக்கும். அப்போ புது பெண்களுக்கு தனி தொகுதியாக ஒதுக்க வேண்டும். எல்லா தொகுதிகளுக்கும் ஆண்கள் நிறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதுபோன்று நிற்பதை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அங்கு இடைத் தேர்தல் நடத்தாமல், கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் வந்தவரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த இடத்தில் இடைத்தேர்தல் நடத்த செலவாகும் பணத்தை, நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற, அந்த சட்டமன்ற உறுப்பினரிடம் வசூல் செய்ய வேண்டும். இந்த சின்னம்தான் வேண்டும்‌ என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது” எனத் சீமான் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget