Lok Sabha Election: சென்னையில் எந்த தொகுதிக்கு எங்கு வேட்புமனு தாக்கல்? எத்தனை பேருக்கு அனுமதி? முழு விவரம்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். சென்னையில் எந்த தொகுதிக்கு எங்கு வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்பதை கீழே காணலாம்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டத்திலே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு மாநகராட்சி முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
" இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை மக்களவைத் தொகுதி, தென்சென்னை மக்களவைத் தொகுதி மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19.04.2024 அன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களானது நாளை (20.03.2024) முதல் 27.03.2024 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) ஆகிய நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கீழ்க்கண்ட அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
நாடாளுமன்றத் தொகுதிகள் |
முகவரி |
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் |
எண்.02. சென்னை வடக்கு பாராளுமன்றத் தொகுதி |
தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.62, பேசின்பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21. |
கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்/ வட்டார துணை ஆணையாளர் (வடக்கு) |
முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.62, பேசின்பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21. |
எஸ். தனலிங்கம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / பொது மேலாளர், TANSIDCO |
எண்.03. சென்னை தெற்கு பாராளுமன்றத் தொகுதி |
தேர்தல் நடத்தும் அலுவலர்/தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 |
எம். பி. அமித், இ.ஆ.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்/ வட்டார துணை ஆணையாளர் (தெற்கு) |
முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 |
பி. எம். செந்தில் குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/பொது மேலாளர் (பொது) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் |
|
எண்.04. சென்னை மத்திய பாராளுமன்றத் தொகுதி |
தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் (அலுவலகம்), பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.36பி, புல்லா அவென்யூ, செனாய் நகர், சென்னை-30 |
கே.ஜெ. பிரவீன் குமார், இ.ஆ.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்/ வட்டார துணை ஆணையாளர் (மத்தியம்) |
முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் (அலுவலகம்), பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.36பி, புல்லா அவென்யூ, செனாய் நகர், சென்னை-30 |
கவிதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/பொது மேலாளர் (பொது), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
- வேட்புமனுத்தாக்கல் தொடக்கம் : 20.03.2024
- வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் : 27.03.2024
- வேட்புமனு பரிசீலனை : 28.03.2024
- வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : 30.03.2024
- தேர்தல் நாள் : 19. 04.2024
- வாக்கு எண்ணிக்கை நாள் : 04. 06.2024
யாருக்கு அனுமதி?
மேலும், வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3.00 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை எனத் தெரிவித்தார்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.