மேலும் அறிய
Advertisement
தமிழகத்தில் இருக்கும் அத்தனை ரவுடிகளும் பாஜவில் அடைக்கலமாக இருக்கின்றனர் - முத்தரசன்
நம் நாட்டில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு ஒரு கடுமையான நெருக்கடியை மோடி அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் அத்தனை சமூகவிரோதிகளும், ரவுடிகளும் போலீஸ் துறையால் தேடப்படும் நபர்களும் பாஜவில் அடைக்கலமாக இருக்கின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சியின் இந்திய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது
திருப்பத்துாரில் நடந்த நிருபர்கள் சந்திப்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: பிரதமர் மோடி பகிரங்க முயற்சி எடுத்தாலும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது சாத்தியமே கிடையாது.
காரணம் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்தியா முழுவதும் செல்கிறார். தமிழகத்திற்கு ஏழு முறை வந்துள்ளார். மீண்டும் வருவதாக அறிவித்திருக்கிறார். எந்த பொதுக்கூட்டத்திலும் கடந்த காலங்களில் நடந்த தேர்தல் வாக்குறுதிகளில், என்னென்ன வாக்குகள் நிறைவேற்றி இருக்கிறேன் என்பது இதுவரை ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறினார். அப்படி பார்த்தால் பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். விவசாயிகள் கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர்கள் நுாறாண்டு போராடி பெற்ற உரிமைகளும், சட்டங்களும் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் எதுவும் இயங்க முடிவதில்லை.
ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பகிரங்கமாக கொள்ளையடிக்கப்படுகிறது. பொதுவாக ஏழைகளுக்கு விதிக்கப்படும் வரி குறைக்க வேண்டும். பெரும் நிறுவனங்களின் வரி அதிகரிக்க வேண்டும். இதுதான் ஒரு அரசு நியாயமான முறையில் பின்பற்ற வேண்டும்.
தனது அரசியல் தோல்வியை மூடி மறைப்பதற்கு மதம், ஜாதி கடவுள் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு ஒரு கடுமையான நெருக்கடியை மோடி அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. சர்வாதிகாரத்துக்கு எதிராக நடக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
அதிமுக பகல் வேஷம் போடுகிறது. கடந்த பத்து ஆண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்ட அனைத்து தவறுக்கும் ஆதரவாக இருந்தது. குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்கள் லோக்சபாவில் நிறைவேற்றியபோது அதிமுக ஆதரவாக வாக்களித்தது.
தமிழகத்தில் இருக்கும் அத்தனை சமூகவிரோதிகளும், ரவுடிகளும் போலீஸ் துறையால் தேடப்படும் நபர்களும் பாஜவில் அடைக்கலமாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் சுந்தரேசன் உடன் இருந்தார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion