மேலும் அறிய

Lok sabha election 2024: கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் ; எம்எல்ஏ விரட்டி அடிப்பு - சீர்காழியில் நடந்தது என்ன?

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த எம்எல்ஏ விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜூன் 4ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் பொதுமக்கள் ஆங்காங்கே தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து வருகின்றனர்.


Lok sabha election 2024: கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் ; எம்எல்ஏ விரட்டி அடிப்பு - சீர்காழியில் நடந்தது என்ன?

மீனவர்களின் 20 ஆண்டு கோரிக்கை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கீழமூவர்கரை மீனவர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்துத் தர வலியுறுத்தியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


Lok sabha election 2024: கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் ; எம்எல்ஏ விரட்டி அடிப்பு - சீர்காழியில் நடந்தது என்ன?

தேர்தல் புறக்கணிப்பு 

மேலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருவதாகவும், வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ள இவர்கள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி உள்ளனர். மேலும் தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அதில் முதல் கட்டமாக மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடலில் இறங்கி கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Lok sabha election 2024: கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் ; எம்எல்ஏ விரட்டி அடிப்பு - சீர்காழியில் நடந்தது என்ன?

தொடரும் போராட்டம் 

அதனைத் தொடர்ந்து தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, உள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடைபெற உள்ள பாராளுமன்றம், சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்கத்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் கூட்டத்தில் முடிவெடுத்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Lok sabha election 2024: கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் ; எம்எல்ஏ விரட்டி அடிப்பு - சீர்காழியில் நடந்தது என்ன?

விரட்டி அடிக்கப்பட்ட எம்எல்ஏ 

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தை கிராமத்திற்கு வரக்கூடாது என மீனவ கிராம மக்கள் திரும்பி போ, போ என விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget