மேலும் அறிய

விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம் - முதல்வருக்கு சவால் விட்ட இபிஎஸ்

கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

"ஸ்டாலின் அவர்களே வேளாண்மை பற்றி என்ன தெரியும். விவசாயம் பற்றி பேச வேண்டும் என்றால் மேடை போடுங்கள் பேசுவோம். யார் விவசாயி என்பதை நிரூபிக்கிறேன்" என கரூரில் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விட்டார்.

விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம் - முதல்வருக்கு சவால் விட்ட இபிஎஸ்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தோரணக்கல்பட்டி பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை ஆற்றுகிறார். இந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்: பல மொழிகளில் பேசும் திறன் பெற்றவர் தங்கவேல். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.  தமிழகத்தில் அதிகளவில் வெற்றி பெற்ற தொகுதி கரூர் தொகுதி என பெயர் எடுக்க வேண்டும். விளையும் பயிர் முளையில் தெரிவது போல் இந்த கூட்டமே சாட்சி. இந்த மாவட்டம் அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. தனி அந்தஸ்து பெற்று முன்னேறியதற்கு அம்மா அரசு உறுதுணையாக இருந்தது.

விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம் - முதல்வருக்கு சவால் விட்ட இபிஎஸ்

அம்மா ஆட்சியில் இங்கு தரமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது, அதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகிறார். அவரால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சொல்லாமல் வாக்கு கேட்டு வருகிறார் எனவும், திறமையற்ற முதல்வரை தேர்ந்தெடுத்து 36 மாதம் வீணாக போய் விட்டது. தற்போது இருக்கின்ற காங்கிரஸ் வேட்பாளர் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். நம் வேட்பாளர் திறமையான வேட்பாளர். இந்தியாவிலேயே முதலிடமாக இருந்த நம் மாநிலம் தற்போது திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் அரசாக இருக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்த போது நினைத்து இருந்தால் நீங்கள் ஒருவர் கூட வெளியில் இருந்திருக்க முடியாது. கரூர் மாவட்டத்தில் மட்டும் மிக மோசமான சூழ்நிலை. இதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதிமுக தொண்டன் எதற்கும் அஞ்ச மாட்டான்.

விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம் - முதல்வருக்கு சவால் விட்ட இபிஎஸ்

கட்சியை முடக்கப் பார்த்தார்கள் அதனை எல்லாம் தூள் தூளாக்கி அதிமுக தொண்டன் கட்சி என்பதை உறுதி செய்துள்ளோம். குறுக்கு வழியை கை அழுவது திமுக அரசு தான்  520 தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை. 90% நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறீர்கள். திமுக தேர்தல் அறிக்கையில் பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் செய்யவில்லை. நாம் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் தான் உரிமை தொகை குடும்ப தொகைக்கு பணம் கொடுத்தார்கள். 2021 ஆட்சிக்கு வந்திருந்தால் 2000 ரூபாய் உரிமை தொகை கொடுத்து இருப்போம். 100 நாளை 150 நாளாக உயர்த்துவதாக சொன்னார்கள் உயர்த்தினார்களா, நியாயவிலை கடையில் 2 கிலோ சக்கரை கொடுத்தார்களா, மின் கட்டணம் மாதம்  ஒரு முறை எடுக்கப்படும் என்றார்கள் செய்தார்களா எதுவும் கொடுக்கவில்லை அத்தனையும் பொய். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மூடுவதுதான் திமுக சாதனை. இங்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தார். 10 ரூபாய் பாலாஜி, பாலாஜி 3600 கோடி கப்பம் கட்டிக் கொண்டிருந்தார். செந்தில் பாலாஜிக்கு வேண்டியவர்களை பார் நடத்தி 1000 கோடி கப்பம் கட்டியதால் இன்று செயல் வீரர். அதனால் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.  5 கட்சிக்கு போயிட்டு வந்திருக்கிறார். செந்தில் பாலாஜி செயல் வீரர் என ஸ்டாலின் சொல்கிறார். அவர் சிறையிலேயே தான் இருக்க வேண்டும். ஊழல் செய்தவர் எங்கு இருப்பார்.

விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம் - முதல்வருக்கு சவால் விட்ட இபிஎஸ்

அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்த போது, சட்டமன்றத்தில் பேசியதையும், இப்ப பேசியதையும் கேட்டுக்குங்க, முடிவு செய்துக்குங்க. சி ஏ ஏ கொண்டு வந்த போது மாநிலங்களவையிலும், வெளியிலும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதிமுக. ஸ்டாலின் அவர்களே வேளாண்மை பற்றி என்ன தெரியும். விவசாயம் பற்றி பேச வேண்டும் என்றால் மேடை போடுங்கள் பேசுவோம் யார் விவசாயி என்பதை நிரூபிக்கிறேன். விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சி அதிமுக தான். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சி அதிமுக தான். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கள்ள தொடர்பில் இருப்பதாக சொல்கிறார்கள். அது நாங்கள் இல்லை நீங்கள் தான். தமிழகத்தில் போதை பொருள் கிடைக்கிறது. கஞ்சா எல்லா இடத்திலேயும் கிடைக்கிறது. திமுக நிர்வாகியை போதை பொருள் வழக்கில் கைது செய்தி இருக்கிறார்கள். 3 ஆண்டுகளில் எத்தனை கோடி கொள்ளை அடித்திருப்பார்கள். அப்போது புகைபடங்களை காட்டி பேசினார். திமுக ஆட்சியில் விலைவாசி வின்னை முட்டுகிறது. மின்கட்டணம், வீடு வரி உயர்ந்து விட்டது. 3 தொழில்கள் மிகவும் நசிந்து விட்டது. பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம் ஆட்சியில் நிறைய செய்து கொடுத்து இருக்கிறோம். கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை உள்ளிட்ட திட்டங்கள் பல கோடி மதிப்பீட்டில் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget