மேலும் அறிய

DMK Candidates: புதிய வாரிசுகளுக்கு வாய்ப்பா? நாளை திமுக வேட்பாளர்களை அறிவிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில், வாரிசுகளின் பெயர்கள் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோக மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகியவற்றிற்கு தல ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக, கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 மக்களவை தொகுதிகளில் திமுக களம் காண்கிறது. 

வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்:

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியபோக மீதமுள்ள, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்,  காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி) ஆகிய தொகுதிகளில் திமுக களம் காண்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளார். அதில் ஏற்கனவே மக்களவை உறுப்பினர்களாக உள்ள பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடாத ஈரோடு, ஆரணி, கோவை மற்றும் தேனி போன்ற தொகுதிகளில் இந்த முறை திமுக களம் காண்கிறது.

மீண்டும் வாரிசுகளுக்கு வாய்ப்பா?

ஏற்கனவே எம்.பிக்களாக இருக்கும் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், கவுதம சிகாமணி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் வாரிசு கோட்டாவில் தான் எம்.பிக்களானதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த முறையும் மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுபோக புதியதாக, அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் நேரு, சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு மற்றும் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி பிரபு ஆகியோரும், இந்த முறை மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போதைய திமுக எம்.பிக்கள்: 

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அதன்படி தற்போது ஜெயக்குமார், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன்,டி.ஆர். பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், செந்தில்குமார், அண்ணாதுரை, கவுதம சிகாமணி, எஸ். ஆர். பார்த்திபன், ஆ.ராசா. சண்முக சுந்தரம், வேலுச்சாமி, பாரிவேந்தர், ரமேஷ், ராமலிங்கம், பழனிமாணிக்கம், கனிமொழி, தனுஷ் எம். குமார் மற்றும் ஞானதிரவியம் ஆகியோர் தற்போது திமுக எம்.பிக்களாக உள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget