மேலும் அறிய

பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை - ஜோதிமணி

பாராளுமன்றத்தில் மூன்று மொழிகளில் பேசுவேன் என்று பேசிய அதிமுக கரூர் வேட்பாளர் தங்கவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேச்சு.

கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மேலிட பொறுப்பாளர் எம்பி அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, சிபிஎம், சிபிஐ, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை - ஜோதிமணி

நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியை கொண்டு வரும் மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக பெரிய யுத்தத்தை நடத்திக்கொண்டு இருந்தோம். தமிழகத்தில் உள்ள அதிமுக பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடனும் பிரதமர் மோடி உடனும் நட்பு பாராட்டி வந்தனர். தமிழகத்துக்கு வெள்ள நிவாரணதொகை ஒன்றிய அரசு நயாபைசா வழங்க முடியாது என தெரிவித்தது. ஏன் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எதிராக போராடவில்லை.

பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை - ஜோதிமணி

இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி தனித்தனியாக தேர்தலில் போட்டி போடுகின்றனர்.  பாரதிய ஜனதா கட்சிக்கும் அதிமுக கட்சிக்கும் வாக்களிப்பது ஒன்றுதான். கரூரில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மூன்று மொழிகளில் பாராளுமன்றத்தில் பேசுவேன் என பெருமையாக கூறி வாக்கு சேகரித்து வருகிறார். எத்தனை மொழிகளில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை எதை பற்றி பேசுகிறோம் என்பது தான் முக்கியம். பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்  என்ன பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் உறுப்பினர்களை பாரதிய ஜனதா அரசு இடைநீக்கம் செய்தது.

ஆனால் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த அதிமுக உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு ஆதரவளித்து அமைதி காத்தனர். தினந்தோறும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த அளவுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக மக்கள் பணி ஆற்றுவதற்காக தேவைப்பட்டால் ஆங்கிலத்திலும் கூட குரல் எழுப்பினேன். பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை எதற்காக பேசினோம் என்பது தான் முக்கியம்” என  அதிமுக கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி  பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஐந்து ஆண்டு காலம் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆற்றிய மக்கள் பணி குறித்து குறை சொல்ல ஏதும் இல்லை என்பதால், தொகுதி பக்கம் வராத காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என பிரச்சாரம் செய்கின்றனர்.

பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை - ஜோதிமணி

தினந்தோறும் தான் பாராளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் அனைத்தும் ஊடகங்களில் வந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் செலவிட உதவியாளர் அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் நிதியினை பயன்படுத்தி செலவு செய்துள்ளேன். நரேந்திர மோடியை போல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தில் ஆடை அணிந்து கொள்ளவில்லை. தங்க நகை ஆபரணங்களை வாங்கி அணிந்து கொள்ளவில்லை.  பாரதிய ஜனதா கட்சியை பார்த்து பயந்து அமைதியாக அதிமுக போன்று தான் அமர்ந்திருக்கவில்லை. மக்களுக்கு உண்மை தெரியும். என் மீதான பொய் பிரச்சாரங்களை தேர்தல் பிரச்சாரத்தில் முறியடிப்பேன். பாஜக ஒன்றிய அரசு அமலாக்க துறையை வைத்து, செந்தில் பாலாஜியை 9 மாதங்கள் சிறையில் அடைத்து, அவரது மன வலிமையை ஒடுக்க முடியாது. அதேபோல இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி மனவலிமையும் குறையாது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதுதான் இந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு அளிக்கும் பதிலடியாகும்” என்று ஜோதிமணி பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget