மேலும் அறிய

கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - அண்ணாமலை

கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், சுயநினைவோடு தான் இருக்கிறாரா என்பதை அவர் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரவணம்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார். நாளை மறுநாள் கோவை வரும் பிரதமர் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோவை, மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்கிறார். மீண்டும் 12ஆம் தேதிக்கு பின்னர் பிரதமர் தமிழகம் வரவுள்ளார். திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொடர்புபடுத்தி நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி வேலை செய்து அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பணத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் திமுக அனைத்து தவறுகளையும் செய்து விட்டு மற்றவர்களை திருடன் என்கிறது. உண்மையான திருடன் திமுக தான் என ஆர்.எஸ்.பாரதி பேசுவதிலேயே தெரிகிறது. கோவையில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் திமுகவிற்கு வாக்களித்தால் தங்கத்தோடும், 2000 பணமும் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வருகிறது. 

கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்ய வேண்டும்

தமிழ்நாட்டிற்கு சர்வதேச மைதானங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கோவையில் தரமான சாலைகள் இல்லை, சரியாக குப்பைத் தரம் பிரித்து பராமரிப்பது இல்லை, இந்த நிலையில் அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் கொண்ட கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என கூறுவது சரி. நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் சர்வதேச மைதானம் என கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கூறியுள்ளார். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார். நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமல்ஹாசன் கருத்துக்கு பதில் அளித்தவர், ”கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், சுயநினைவோடு தான் இருக்கிறாரா என்பதை அவர் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிற்கு கமல் விற்றுவிட்டார்” என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் எந்த கிராமத்திற்கும் செல்வதில்லை. ஸ்பெயின், லண்டன், துபாய் என வெளிநாடுகளுக்கு தான் செல்கிறார் கிராமத்திற்கு வந்து மக்களை அவர் சந்திப்பதில்லை. பல்லடம் சூலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. விசைத்தறி தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பாஜக தீர்வுகளை கொடுத்துள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டம், பாண்டியாரு முண்ணம்புலா திட்டம், பவர் டெக்ஸ் திட்டம் ஆகியவை அமல்படுத்தப்படும் என கூறியுள்ளோம். சோலார் மின்தகடு பொருத்த மானியத்தை உயர்த்தி 75 சதவீதமாக கொடுப்போம் எனவும் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும் நூல் வங்கிகள் உருவாக்கப்பட்டு நூல் விலை கட்டுக்குள் வைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளோம்.

கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - அண்ணாமலை

தேர்தல் அறிக்கை

கோயம்புத்தூர் நகர பகுதியை பொறுத்தவரை 150-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட நகரின் ஒரு பகுதியில் அடிப்படை கழிவறை வசதி கூட இன்னும் கட்டப்படவில்லை. சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும், சரியான இடங்களில் பாலம் அமைக்க வேண்டும், நீர்நிலைகளை புனரமைக்க வேண்டும், விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும், ஆட்டோமொபைல் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக்கான வளர்ச்சி மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என வாக்குறுதிகள் நாங்கள் கொடுத்து வருகிறோம். தேசிய தேர்தல் அறிக்கை வெளியானதும் இந்த தொகுதிக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.

நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதற்கு நூல் விலை உயர்வு மட்டுமே காரணம் இல்லை. திமுகவின் அதிகப்படியான மின்சார கட்டண உயர்வும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்காகவே தரமான நூல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காகவும் ஏற்றுமதியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம். காலை உணவு திட்டம் என்பது திமுகவின் யோசனையால் உருவான திட்டம் என கூற முடியாது, தேசிய கல்விக் கொள்கை 2020இல் காலை உணவு திட்டம் உள்ளது. பெங்களூரில் இஸ்கான் அமைப்பினர் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கி வருகின்றனர். இதற்காக அனுமதி கேட்டபோது தமிழக அரசு மறுத்தது. சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என யாரையும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. அனைவரையும் கோவை மக்கள் என சமமாக கருதி அவர்களின் வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை எடுத்துரைத்து வருகிறோம்.

பாஜக தான் வெற்றி பெறும்

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி கோவையின் தேர்தல் களத்தை இயக்கி வருவது தெளிவாக தெரிகிறது. கரூர் கம்பெனி ஆட்கள் என கூறுபவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர் சிறையில் இருந்து எழுதும் கதையை அமைச்சர் டிஆர்பி ராஜா செயல்படுத்தி வருகிறார். மக்கள் இதை நன்கு அறிந்துள்ளனர். தங்கச் சுரங்கத்தை கோவையில் கொட்டினாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்பது உறுதி. அதிமுக வேட்பாளர் எனது பிரச்சார வாகனத்தை சிறை பிடித்ததாக கூறி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த வாகனத்தில் நான் இல்லை. வெறும் டயரை சுற்றி தான் அவர்கள் அமர்ந்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடத்தில் நாங்கள் செல்லவில்லை. ஜூன் நான்காம் தேதி சாமானியனின் குரலை சாராய வியாபாரியின் மகன் கேட்கப் போகிறார். 60% வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம். வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Embed widget