மேலும் அறிய

ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை

மூத்த அரசியல் தலைவர் ராகுல்காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தை சொல்கிறது? இதை திமுகவினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர்.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அய்யம்பாளையம் பகுதியில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”ஆனைமலை - நல்லாறு திட்டத்திற்கு பெரிய எதிர்ப்பு இல்லை, 1958 ல் போட்ட 2 ஒப்பந்தம், கேரள அரசு அவர்களின் ஒப்பந்தத்தில் நிறைவேற்றி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். திட்டத்திறற்கான வரைவு அறிக்கை தயார் செய்யவே 10,000 கோடி செலவாகும் என்பதால், பிரதமரை சந்தித்து பாஜக வேட்பாளர்கள் நீலகிரி, திருப்பூரில் வென்றவுடன் உறுதியாக செயல்படுத்தப்படும். சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் வாழ முடியாது. நீர்நிலை வற்றி உள்ளது. நிலத்தடி நீர் 1000 அடிக்கு கீழ் உள்ளது. ஆனைமலை - நல்லாறு திட்டம் மட்டுமே தீர்வு. 100 நாட்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

போக்குவரத்து விதிமீறல்

ராகுல்காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது என்பது போக்குவரத்து விதிமீறல். அண்ணாமலை என்றால், திமுகவும் கோவை காவல்துறை கிளம்பி வருவார்கள். மூத்த அரசியல் தலைவர் ராகுல்காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தை சொல்கிறது? இதை திமுகவினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், ராகுல்காந்தி ஒரு நியாயமா? ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும். ஸ்டாலினுக்கு தான் பயம் வந்துள்ளது. ராகுல்காந்தி வயநாட்டிற்கு செல்லும்போது கம்யூனிஸ்ட் எதிர்த்து உள்ளனர். எல்லைத்தாண்டி இங்கு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் என்கின்றனர். இந்தியா கூட்டணியின் நிலை.

ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை

ஸ்டாலினுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாததால், ராகுல்காந்தி அழைத்து வருகிறார். அண்ணாமலையை தோற்கடிக்க திமுகவே இங்கு நின்றது. தோற்கடிக்க முடியாது என்பதால் ராகுல்காந்தியை அழைத்து வந்துள்ளனர். கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது, 60% வாக்குகள் கிடைக்கும். அதிமுக தொண்டர்கள் வெளியே வந்து கிராமத்தில் அனைவரும் பாஜகவில் இணைந்து மோடியின் பக்கம் வந்துள்ளனர். சூலூர், பல்லடம் பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த முக்கியமானவர்கள் பாஜக பக்கம் வந்துள்ளனர். களத்தில் வேலை செய்கின்றனர். அதிமுகவின் நிலையை அவர்கள் ஏசியிலிருந்து வெளியே வந்து எட்டி பார்க்க வேண்டும். தேசிய தேர்தல், பிரதமருக்கான தேர்தல், பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஓட்டி வருகின்றனர்., நாளை பிரச்சாரம் முடிய உள்ளது. களத்தில் பார்த்தால் அதிமுக வாக்கு வெளியே வந்துவிட்டது. அதிமுக மாய உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பாஜகவின் வெற்றியை நடுநிலை வாக்குகள் தீர்மானிக்கிறது. ஜூன் 4 கள நிலவரம் பாருங்கள், பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும். தேங்காய் உற்பத்தி என்பது தமிழகம், கேரள, ஆந்திரா ஆகிய மாநிலங்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுப்பதாக தெரிவித்தனர்., ஆனால் கொடுக்கவில்லை, மத்திய அரசு கொப்பரை தேங்காய் வாங்கி,  பாரத் தேங்காய் எண்ணெய் உருவாக்கி, நாங்களே ரேஷன் கடையில் கொடுக்க உள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் திமுக தேர்தல் அறிக்கை நிறைவேற்றவில்லை என சொல்ல தயாராக இல்லை, நாங்கள் களத்திற்கு வந்து விட்டோம். தேங்காய் கொள்முதல் என்பது மாநில பிரச்னை.  மாநில அரசு செவி சாய்க்க போவதில்லை அதனால் பாரத் தேங்காய் திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் 2 இலக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 ஐ தாண்டி, ஒவ்வொரு நாளும் எழுச்சியால் 39 நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் கட்சியில், கூட்டணியில் 25 இலக்கு வைத்துள்ளோம்.

கோவையில் பாஜக வெல்லும்

கோவையில் பாஜக நம்பிக்கையாக வெல்லும் என சொல்வது போல்  தமிழக அளவிலும் சாதகமாக வரும். சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், கோவை மத்திய ரயில் நிலையம் உலகம் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும். வாரணாசி போல் கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். கோவையில் முதல்வரின் மருமகன் உட்கார்ந்துள்ளார். நாளையிலிருந்து உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் உட்கார உள்ளார், தமிழகத்தின் புலனாய்வு பிரிவு இங்கு தான் உட்கார்ந்துள்ளனர். கணக்கு இல்லாமல் செலவழிக்கின்றனர். தண்ணீர் இருக்கோ இல்லையோ பணத்தை தண்ணீர் மாதிரி செலவழிக்கின்றனர். பணம் பலத்தை வைத்து திமுக வெற்றிபெற போவதாக நம்புகிறது. அதை உடைத்து நாங்கள் வெற்றிப்பெறுவோம். தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார்” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget