தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
தூத்துக்குடி மாவட்டத்தில் 1622 வாக்கு சாவடிகள் உள்ளன. மேலும் 2 துணை வாக்கு சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டப்பேரவை தொகுதியில் உள்ளன. இவைகளில் மொத்தம் 1622 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதியில் தலா ஒரு வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிக்க தேர்தல் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் தூத்துக்குடி மக்களை தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1624 ஆக உயரும்.
தற்போதைய நிலையில் 256 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனவும், இரண்டு வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை முழுமையாக வெப் கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வாக்கிய எண்ணிக்கை மையம் தூத்துக்குடி வ உ சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 7,08,244 ஆண் வாக்காளர்களும், 7,39,720 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 215 பேர் என மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் சிலர் புதிதாக சேர்ந்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லவும் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு என்னும் மையத்துக்கு அவற்றைக் கொண்டு செல்வதற்காகவும் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் 9 பறக்கும் படை என மொத்தம் 54 பறக்கும் படை குழுக்களும் 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா ஒரு குழு என ஆறு வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு கண்காணிக்க 348 நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக சுமார் 10,000 பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 4431 வாக்குப்பதிவு அலகுகள், 2090 கட்டுப்பாட்டு அலகுகள்,2595 விவிபாட் கருவிகள் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் 163 வாக்குப்பதிவு அலகுகள், கட்டுப்பாட்டு அலகுகள், விவிபாட் கருவிகள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சியாளர் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 48 பேர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள், சுவர் விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள் அழிக்க அல்லது அகற்ற பட வேண்டும், அதேபோல் தனியார் , அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசியல் விளம்பரங்கள், பதாகைகளை 72 மணி நேரத்தில் அழிக்க அல்லது அகற்ற வேண்டும், அரசியல் கட்சி கொடிகள், சிலைகள் அனைத்தையும் துணிகளால் மூடிட வேண்டும் என்றார்.