மேலும் அறிய

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி

’’ஆளுநர் அவர்களே தற்போது நடைபெறுவது அடிமை அதிமுக ஆட்சி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’’

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  திறந்த வேனில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியிலும் திமுகவை வெற்றி பெற வைத்தீர்கள். கரூர் மாநகராட்சியிலும் வெற்றியை தேடி தருவீர்கள் என்ற நம்பிக்கை  உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற 8 மாதத்தில் மிகப்பெரிய சாதனையை திமுக அரசு செய்துள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. 2 தவணைகளாக 4000 தரப்பட்டது. பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச கட்டணம், இல்லம் தோறும் கல்வி, நம்மை காக்கும் 48, மின் நுகர்வோர்களுக்கு மின்னகம் மூலமாக 24 மணி நேர சேவை. 

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி

வட மாநில பத்திரிக்கை சர்வே ஒன்று இந்தியாவில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என்று கூறியுள்ளது. இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு தமிழக முதல்வர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என நேரில் சென்று தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையை திருப்பி அனுப்பினார். மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மசோதா நிறைவேற்றி அனுப்பட்டுள்ளது. 

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. பழனிச்சாமி, நீட் தேர்வு ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் ரகசியமாக வைத்துள்ளார் அந்த ரகசியம் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு, உதயநிதி ஸ்டாலின் கரூரில் பதில். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை  நாங்கள் ஓய மாட்டோம். ஆளுநர் அவர்களே தற்போது நடைபெறுவது அடிமை அதிமுக ஆட்சி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மோடி தமிழகத்தை பார்த்து திருந்த வேண்டுமென ராகுல்காந்தி பேசி உள்ளார். தமிழக மக்கள் சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 48 பேரில் ஒருநபர்  ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். மீதமுள்ள 47 பேரை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பேசினார். திறந்த வேனில் நின்றவாறு மக்களிடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுடன், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தார். தொடர்ந்து வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தலைப்பு செய்திகள்

வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget