Local Body Election | நான் கமிஷன் வாங்க மாட்டேன் - உறுதி மொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்
பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள உஷாதேவி, 20 ரூபாய் பத்திரத்தில் என் மீது எந்த குற்றவழக்குகளும் இல்லை எனவும், கமிஷன் வாங்க மாட்டேன் என்றும் எழுதி வார்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்
![Local Body Election | நான் கமிஷன் வாங்க மாட்டேன் - உறுதி மொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் Local Body Election | No criminal cases- Commission will not buy- BJP candidate collecting votes by giving affidavit Local Body Election | நான் கமிஷன் வாங்க மாட்டேன் - உறுதி மொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/12/0c365e7f876d63e98c0c972fb8a88575_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வரும் 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் வகையில் தோசை சுடுவது, டீ போடுவது, காப்பி போடுவது ஒவ்வொருவரும் தங்களது பகுதிகளில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Valentine's Day | இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி - காதலர் தினத்தன்று திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு பகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள உஷாதேவி மேற்கொண்டுள்ள நூதன பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 20 ரூபாய் பத்திரத்தில் என் மீது எந்த குற்றவழக்குகளும் இல்லை எனவும், கமிஷன் வாங்க மாட்டேன் என்றும் எழுதி வார்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் உஷாதேவி. இந்த பத்திரத்தை பயன்படுத்தி நீதிமன்றம் வரையில் வழக்குத் தொடுக்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election | நாங்க ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் - மெழுகுவர்த்தி ஏற்றி உறுதி எடுத்து கொண்ட மக்கள்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | காலணி தைத்து கொடுத்தும், பாலிஷ் போட்டும் வாக்குகளை ஸ்கோர் செய்த அதிமுக வேட்பாளர்
இது தொடர்பாக உஷாதேவி கூறுகையில், 20 ரூபாய் பத்திரத்தில் தன் மீது எவ்வித குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். நான் கவுன்சிலர் ஆன பிறகு ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் உரிய முறையில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேன். மக்கள் யாரிடமும் கமிஷன் பெற மாட்டேன், அதோடு தங்கள் வீட்டில் நடைபெறும் கட்டுமான வேலைகள் சம்பந்தமாகவோ அல்லது கழிவுநீர் குடிநீர் சம்பந்தமாகவோ எந்த வேலை வந்தாலும் பணம் பெற மாட்டேன். பொதுமக்களை ஏமாற்றி பணம் தர மாட்டேன் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், அனைத்து அரசு சேவை அரசாங்க சேவைகள் 24 மணி நேரமும் இலவசமாக செய்து கொடுப்பேன் என உறுதி கூறுகிறேன் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நகைகடன் தள்ளுபடியா? - மயிலாடுதுறையில் விவசாயிகள் போராட்டம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)