Local Body Election | விதிகளை மீறி இரவில் கூட்டம் - பறக்கும் படையால் நடையை கட்டிய காங்கிரஸ் தலைவர்கள்
’’இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், ஆகவே உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எங்களுக்கு புகார் கொடுத்து உள்ளார்கள் என பறக்கும் படையினர் தெரிவித்தனர்’’
![Local Body Election | விதிகளை மீறி இரவில் கூட்டம் - பறக்கும் படையால் நடையை கட்டிய காங்கிரஸ் தலைவர்கள் Local Body Election | Meeting at night in violation of the rules - Congress leaders who built the march by the flying force Local Body Election | விதிகளை மீறி இரவில் கூட்டம் - பறக்கும் படையால் நடையை கட்டிய காங்கிரஸ் தலைவர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/11/9b9761ad090c8801cb169e5a604c79ae_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருநெல்வேலி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடம் மட்டுமே ஒதுக்கிய திமுகவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர், மேலும் காங்கிரஸ் கட்சியை திமுக புறக்கணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது, கூட்டம் இரவு 8.30 மணிக்கு துவங்கியது, தொடங்கியவுடனேயே தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி பேசினார். அப்போது இந்தியாவில் ஒவ்வொரும், அவர்களுக்கு ஏற்ற உடைகளை அணிவார்கள், ஆனால் அந்த ஆடைகளை அணியக் கூடாது என யாரும் தெரிவிக்க கூடாது என பேசினார்.
இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார், ஆனால் மேடைக்கு கீழே இருந்த பெண்கள் ஆங்கிலம் தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தனர், ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்டு தான் வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி கூட்டத்தையும், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இல்லாததால் அதிக அளவில் பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வந்தனர் காங்கிரஸ் கட்சியினர்,
இரவு 8.45 மணி அளவில் பறக்கும் படையினர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அப்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தான் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நீங்கள் பிரச்சாரம் செய்வதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், ஆகவே உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எங்களுக்கு புகார் கொடுத்து உள்ளார்கள் என பறக்கும் படையினர் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா, கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பதறிப்போய் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு கிளம்பினர். இதைத்தொடர்ந்து அழைத்து வரப்பட்ட பெண்களும் கலைந்து சென்றனர், இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
திமுக, அதிமுக மீது அதிருப்தி உள்ளதால் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது - நயினார் நாகேந்திரன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)