மேலும் அறிய
Advertisement
Local Body Election | எதிர்காலத்தில் ஏழைகள் தேர்தலை சந்திக்க முடியுமா? - பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை
’’வாக்காளர்களை விலை பொருளாக சந்தை பொருளாக மாற்றிய கேவலமான செயலை திமுக செய்துள்ளது’’
தமிழகத்தில் நகர்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 23 ஆவது வார்டில் உள்ள டதி பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் தமிழகத்தில் பண பட்டுவாடாவை பழக்கப்படுத்தி விட்டார்கள் , எதிர்காலத்தில் நேர்மையானவர்கள், எழைகள் தேர்தலை சந்திக்க முடியுமா என்பது கேள்விக்குறி இது வருந்தத்தக்கது. திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்தவர்கள் திமுக, தமிழகத்தை அகலபாதாளதில் தள்ளியதில் திமுகவிற்கு முக்கிய பொறுப்பு உள்ளது, தமிழக மக்களை, வாக்காளர்களை விலை பொருளாக சந்தை பொருளாக மாற்றிய கேவலமான செயலை திமுக செய்துள்ளது.என்றார் மேலும் இந்த தேர்தலில் பாஜக தந்து நின்றதன் மூலம் மிகப்பெரிய எழுட்சி ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion