மேலும் அறிய
Advertisement
Local body election | காஞ்சியில் ஓபிஎஸ் கலந்து கொண்ட பரப்புரை கூட்டம் -நடத்தை விதிகளை மீறியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்திய தண்டனைச் சட்டம் 143 , 260 , 270 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
காஞ்சிபுரம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோல்கேட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக காஞ்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள காஞ்சி மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக அளவு கூட்டம் கூடியும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமல் அரசு கொரோனா விதிமுறைகளை மீறியும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதால் காஞ்சிபுரம் நகர இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் காவல் நிலைய நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 143, 260 , 270 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் தொடங்கினார் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் தேர்தல் விதி மீறி திருமண மண்டபம் வளாகம் முழுவதும் பொது மக்களால் நிரம்பி வழிந்தது காற்று புக முடியாத அளவுக்கு ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் பெரும்பாலான தொண்டர்கள் முகக்கவசம் அணியாமல் போதிய விழிப்புணர்வு ஏதும் இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர் என புகார் எழுந்து இருந்தது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், தேர்தல் நேரத்தில் நடந்த பிரசாரக் கூட்டங்களில், பேரணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இப்போது நிலவும் சூழ்நிலைக்கு தேர்தல் கமிஷன்தான் முழு காரணம். இந்த நீதிமன்றம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள், பின்பற்றுங்கள் என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த போதும், அரசியல் கட்சி பேரணிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரசார கூட்டங்களிலும், பேரணிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாததால்தான் இப்போதைய பரவல் ஏற்பட்டுள்ளது என்று கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion