மேலும் அறிய

Local body election | தஞ்சை மாநகராட்சியில் 28 வாக்குசாவடிகள் பதட்டமானவை - ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்

தஞ்சை  மாநகராட்சி பகுதியில் மொத்தம் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் 1,98,597 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

தஞ்சை மாவட்டம், நகர் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாக்கு சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு கூறுகையில்,தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம்  தேதி முதல் நடைபெற்று வருகிறது. மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாகும். தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தஞ்சை  மாநகராட்சி பகுதியில் மொத்தம் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் 1,98,597 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

Local body election | தஞ்சை மாநகராட்சியில் 28 வாக்குசாவடிகள் பதட்டமானவை - ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்

மேலும், தஞ்சாவூர் மாநகராட்சியில் வடக்குவாசல், மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் 2 வாக்குசாவடிகளும், வடக்குவாசல், ஜான் டி பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், வடக்குவீதி, செயிண்ட் பீட்டர;ஸ் மேல்நிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், கரந்தை, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குசாவடிகளும், தென்கீழ் அலங்கம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், மிஷன் ஆலமரத்தெரு, டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் 1 வாக்குசாவடியும், வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குசாவடிகளும், பூக்காரகோயில் தெரு, செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குசாவடிகளும், கணபதி நகர் செல்வராஜ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்குசாவடிகளும், கண்ணன் நகர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 4 வாக்குசாவடிகளும், வல்லம் ரோடு, மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரியில் 5 வாக்குசாவடிகளும் என மொத்தம் 28 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகள் ஆகும்.

Local body election | தஞ்சை மாநகராட்சியில் 28 வாக்குசாவடிகள் பதட்டமானவை - ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்

இதில் வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள 2 பதட்டமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இந்த வாக்கு சாவடிகளில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க  வசதியாக சாய்தளம் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு 1,2 மற்றும் 3 நிலை அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி வகுப்பினை ஆய்வுசெய்யப்பட்டுள்ளது என்றார். இந்தஆய்வின் போது, தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம், ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், வட்டாட்சியர் சீமான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget